விஜய்-நயன்தாரா மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் இடம்பெற்ற ‘வாடா மாப்புள்ள வாழப்பம் தோப்புல’ என்ற பிரபல பாடலில் வரும் சில காட்சிகள் இந்த கைப்புள்ள வீட்டிற்கு அருகில்தான் எடுத்திருப்பார்கள். இதேபோல விஜய்-அனுஷ்கா நடித்த வேட்டைகாரன் படத்தில் வரும் ‘கரிகான் காலப்போல’ என்ற பாடலிலும் இந்த வீடு காட்டப்பட்டிருக்கும்.
இதேபோல, கலகலப்பு படத்தின் வரும் ‘அவ திரும்பி பார்த்து சிரிச்சா‘ பாடல், எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தில் வரும் ‘வச்சிக்க வச்சிக்கவா’ பாடலின் சில காட்சிகள், அப்புச்சி கிராமம் படத்தில் வரும் ‘கண்ணுக்குள்’ பாடலின் சில காட்சிகள் என ஏராளமான திரைப்பட காட்சிகள் இந்த ‘கைப்புள்ள வீட்டில்’தான் எடுத்துள்ளனர்.