முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

"குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

Coimbatore elephant | கோவை பேரூர் பட்டீஸ்வர கோயில் யானைக்கு பிரத்யேக குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 • 17

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

   பேரூர் யானைக்கு புதிதாக குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கல்யாணி யானை அந்த குளியல் தொட்டியில் ஜாலியாக குளியல் போட்டது.

  MORE
  GALLERIES

 • 27

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  இந்த நிலையில் பேரூர் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 57

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் மோனோ பிளாக் மோட்டார் மற்றும் யானை குளிப்பதற்கு ஷவர் பொருத்தப்பட்டுள்ளது. யானைக்கு நிழற் குடையும் அமைக்கப்படவுள்ளது. இதேபோல் அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்றுமண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  "குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா" நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட யானை!

  நீச்சல் குளத்தில் யானையை அழைத்து வந்த போது தண்ணீரை பார்த்து குழந்தை விளையாடுவது போல் படுத்து உருண்டு ஆனந்த குளியல் போட்டத்து கல்யாணி யானை.

  MORE
  GALLERIES