ஜங்ஷன் ரயில் நிலையம் ஆறு நடைமேடைகளுடன் சுமார் 20 இரும்பு பாதைகளை கொண்டதாக, தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களுல் ஒன்றாக இருந்து வருகிறது.
2/ 9
கோவையின் முதல் ரயில்நிலையமாக போத்தனூர் சந்திப்பு செயல்பட்டு வந்தது. பின்னர், போத்தனூர் வழித்தடம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவை-மேட்டுப்பாளையம் பாதையில் (கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு வழியாக) நீட்டிக்கப்பட்டது.
3/ 9
1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையில் 34 கி.மீ., துாரம் இயக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 10ஆண்டுகளுக்கு பின்பு 1862ஆம் ஆண்டில், கோவை போத்தனுார் ரயில் சந்திப்பு உதயமானது.
4/ 9
அதன் பின்னர், 1873ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ஆங்கிலேயர்களால், கோவை நகரில் ரயில்கள் நின்று செல்வதற்கான ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அதுவே தற்போதுள்ள கோவை ஜங்ஷன். பழமை வாய்ந்த இத்ந ரயில் நிலையத்திற்கு 150 வயது.
5/ 9
புகழ்பெற்ற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்பே, கோவை ரயில் நிலையம் தொடங்கப்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு இது பழமை வாய்ந்ததாகும்.
6/ 9
கோவை ஜங்ஷன் நாள்தோறும் சுமார் 130 ரயில் இயக்கங்களைக் கையாள்கிறது. இதனால், ஏ 1 அந்தஸ்து பெற்ற ரயில் நிலையமாக இது திகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும், இந்த ரயில் நிலையத்தை சுமார் ஒரு கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
7/ 9
கோவை சந்திப்பு ரயில் நிலையம் மட்டும் ஆண்டொன்றுக்கு 3,859 மில்லியன் ரூபாயை ஈட்டுகிறது. இது கோட்ட வருமானத்தில் 45% ஆகும். சேலம் கோட்டத்திலேயே கோவை முதன்மையான ரயில் நிலையமாக திகழ்வதாக சொல்லப்படுகிறது.
8/ 9
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ், 1864 பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.
9/ 9
அந்தவகையில், பழமையான ரயில் முதல், தற்போது இயக்கப்படும் பல நவீன வசதிகளை கொண்ட ரயில்கள்வரை ரயில்களில் வளர்ச்சியை சந்தித்த ரயில் நிலையமாக இருந்து வருகிறது கோவை ஜங்ஷன்.
19
கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!