முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » 6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

coimbatore News | அவிநாசி சாலை சிக்னலுக்கு மகளையும் அழைத்துச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்டு போக்குவரத்தையும் கண்காணித்து சரி செய்தார் (செய்தியாளர் - ஜெரால்டு)

  • 16

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

    பந்தய சாலை போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வரும் பெண் காவலர் பள்ளி விடுமுறைக்கு வந்த தனது மகளுடன் கோவையின் சிக்னல்களில் நின்று போக்குவரத்தை சரி செய்யும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    MORE
    GALLERIES

  • 26

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்த சிவசரண்யா கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 36

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

    இவரது ஆறு வயது மகள் தந்தையுடன் பழனியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த சிவ சரண்யாவின் மகள் தனது தாயாரின் பணியை நேரில் பார்க்கவும்  தாயாருடன் நேரத்தை கழிக்கவும் ஆசைப்பட்டு தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

    இதை உணர்ந்த சிவசரண்யா குழந்தைக்கும் ஒரு புது அனுபவம் கிடைக்குமே என எண்ணி சம்மதித்து உள்ளார். இதையடுத்து பழனியில் இருந்து மகளை கோவை அழைத்து வந்து உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 56

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

     தான் பணியாற்றும் அவிநாசி சாலை சிக்னலுக்கு மகளையும் அழைத்துச் சென்று தன்னுடன் வைத்துக் கொண்டு போக்குவரத்தையும் கண்காணித்து சரி செய்த படியே தனது மகளையும் கண்காணித்து வந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    6 வயது மகளுடன் டிராபிக்கை ஒழுங்குப்படுத்தும் பெண் காவலர்..! வைரலாகும் புகைப்படங்கள்

    மகளும் தாய், போக்குவரத்தை ஒழுங்கு செய்வதை பார்த்து ஆர்வமுடன் கவனித்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது.

    MORE
    GALLERIES