முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

Coimbatore District | கோயம்புத்தூர் மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பசுமை நிறைந்த ஆனைகட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அருமையான இடம்.

 • 19

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  கோயம்புத்தூரில் இருந்து ஆனைகட்டி சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. யில் இருந்து இங்கே செல்லும் பயணம் அற்புதமான, ஒரு சாகசப் பயணம் போல இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 29

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  மலைகளில் வளைந்து செல்லும் சாலைகள் உங்களை உற்சாகமாக அழைத்துச் செல்லும். வழியில் ஆறுகளும், ஓடைகளும், பசுமையும் உங்களை தன்வசமாக்கும்.

  MORE
  GALLERIES

 • 39

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  கோயம்புத்தூர் மாவட்டம் நீலகிரி மலையடிவாரத்தில் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் அழகிய சொர்க்கம் போல் அமைந்திருக்கிறது இந்த ஆனைகட்டி. இந்த வழியாக சலசலத்து ஓடுகிறது சிறுவாணி ஆறு.

  MORE
  GALLERIES

 • 49

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை பார்த்து ரசிக்க ஆனைகட்டி ஒரு சிறந்த இடமாகும். இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான பழங்குடி மக்கள் கிராமங்கள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 59

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  இந்த ஆனைக்கட்டி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 431 மீட்டர் அதாவது 1,414 அடி உயரத்தில், கோவை-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள மலைவாழிடமாக திகழ்கிறது. இங்கு சுற்றுலா செல்பவர்களுக்காக நவீன தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இங்கே தங்கி இயற்கையில் அற்புதங்களை அனுபவிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  இங்கிருந்து அருகில் உள்ள சிறுவாணி அருவிக்கு சென்று குளித்து மகிழலாம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இந்த அருவி கோவை குற்றாலாம் என்றும் அழைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 79

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  இந்த ஆனைகட்டியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இருக்கிறது சைலண்ட் வேலி தேசிய பூங்கா, இது நீலகிரி மலைகளில் சுமார் 90 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. அழுகாத மழைக்காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 89

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  இந்த பகுதியில் சில அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. கேரள வனத்துறை வாகனத்தைல் சென்று இந்த பகுதியை சுற்றிப்பார்க்கலாம். இதன் பசுமையும் மரங்களும், சுற்றுச் சூழலும் உங்களை மெய்மறக்கச் செய்யும்.

  MORE
  GALLERIES

 • 99

  கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பகுதி ஒரு நாள் டூருக்கு ஏற்ற அட்டகாசமான இடம்...!

  அவ்வாறு சென்று சுமார் 3 மணி நேரம் திகட்ட திகட்ட இயற்கையின் அழகை அள்ளிப் பருகலாம். காட்டு விலங்குகளை கண்டு உற்சாகம் பெறலாம். இங்கே செல்பவர்கள் காலையில் கிளம்பி மதியத்திற்குள் திரும்பிவிடுவது நல்லது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES