எப்போதெல்லாம் அனுமதி? :
இங்கே, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு வனத்துறை அலுவலர்களிடம் முன்பதிவு அவசியம். குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால், 5, 10 மற்றும் 15 பேர் என்றால் கூட முன் கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்ய வேண்டும். மற்ற சில நாட்களிலும் அனுமதி உண்டு. ஆன்லைன் வழியாகவும் வனத்துறை இணையதளத்திற்கு சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.
பூச்சிமரத்தூர் சுற்றுலா :
காலை 10 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை உணவுடன் சேர்ந்து, பூச்சிமரத்தூர் சுற்றுலாவுக்கு ரூ.1500 வசூலிக்கப்படுகிறது. இந்த பயணம், பூச்சிமரத்தூர் சுற்றுலா தளத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், பெரியோர்களுக்கு ரூ.1500ம் சிறியவர்களுக்கு ரூ.800ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.( குறிப்பு: கட்டணங்கள் சற்று ஏற்ற குறையும் இருக்கும்) 5 வயதில் உள்ளோர்களுக்கு கட்டணம் இலவசம். இந்த கட்டணத்தில் தங்குவோர்களுக்கு 3 நேரம் உணவும், வனத்துறையால் வழங்கப்படும் அழகான தங்கும் இடங்களும் வழங்கப்படுகிறது.