முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

Chithirai Chavadi Anaicut | கோவை மக்கள் குடும்பத்தோடும், குழந்தைகளுடனும் சென்று வார விடுமுறை நாட்களில் குளித்து என்ஜாய் பண்ண அற்புதமான இடம் ஒன்று இருக்கிறது. அது குறித்து இங்கே காண்போம்.

 • 17

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  கோவை மாநருக்கு அருகில் இருக்கிறது சித்திரை சாவடி அணைக்கட்டு. இது காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உங்களை குளிர்வித்து மகிழ்விக்க, தெளிவான தண்ணீரோடு தயாராக இருக்கிறது இந்த அணைக்கட்டு.

  MORE
  GALLERIES

 • 27

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  இங்கே குடும்பத்தோடும் குழந்தைகளுடனும் வந்து என்ஜாய் பண்ணலாம். நண்பர்களுடன் வந்தும் நாளை களித்து மகிழலாம். இந்த இடத்திற்கு சொந்த வாகனங்களில் வருவது வசதியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  இந்த அணைக்கட்டுக்கு செல்லும் வழி நெடுக உயர்ந்த மரங்களையும், பசுமை நிறைந்த காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே, சில்லென்று வீசும் இதமான காற்றுடன் இந்த இடத்தை அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திச் செல்வதற்கு இங்கே பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயமில்லாமல் வானத்தை நிறுத்திவிட்டு என்ஜாய் மோடுக்கு செல்லலாம். அப்போது, அருகில் சல சலக்கும் தண்ணீரின் சத்தம் உங்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

  MORE
  GALLERIES

 • 57

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  இந்த அணைக்கட்டில் மழைக் காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். ஆனால், மழை சீசன் முடிந்து கோடைகாலம் தொடங்கும் இது போன்ற நேரங்களில் இங்கே இன்பமாக குளித்து மகிழ்வதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் சீராகக் கொட்டும்.

  MORE
  GALLERIES

 • 67

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  இந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஆழம் இல்லாமல் இருப்பதால் சிறுவர்களும் பயமின்றி குளித்து மகிழலாம். நீச்சல் தெரிந்த பெரியவர்கள் இந்த அணைக்குள் இறங்கியும் நீச்சலடித்து குளித்து என்ஜாய் பண்ணலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  குறைந்த செலவில் குழந்தைகளுடன் சென்று குளித்து மகிழ கோவை சிட்டிக்கு அருகில் ஓர் அட்டகாசமான இடம்!

  வார விடுமுறை நாளில், தண்ணீரில் கிடந்து மகிழந்து களிக்க விரும்பும் கோவை வாசிகளுக்கு இந்த இடம் சொர்க்கம்தான். ஆசை தீர தண்ணீரில் விளையாடிவிட்டு ஆனந்தம் குறையாமல் பிரியா விடையுடன் இங்கிருந்து திரும்பிச் செல்லாம். அப்போது இங்கே மீண்டும் என்போது வரலாம் என்று திட்டமிடச்சொல்லி மனம் ஏங்கத்துடன் தூண்டும்.

  MORE
  GALLERIES