கண்களுக்கு இயற்கை விருந்து படைக்கும் பசுமை நிரம்பி வழியும் இடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை. மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்த வால்பாறையை மையமாக கொண்டு, அந்த பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட இடங்களை 3 நாட் டூர் பிளானில் சுற்றி பார்க்கலாம். இந்த 3 நாள் திட்டத்தில் சுற்றிப்பார்த்து ரசித்து மகிழ வேண்டிய இடங்களைப் பற்றி அறிவோம்.
கோவையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பசுமை கொஞ்சும் வால்பாறை. கோவையில் இருந்து சாலையில் 2 முதல் 3 மணி நேர பயணத்தில் வால்பாறையை அடைந்துவிட முடியும். வால்பாறை பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே தங்குவதற்கு குறைந்த விலையில் விடுதிகள் இருக்கின்றன.
ஆழியாறு அணையில் உல்லாசமாக படகு சவாரியும் செய்யலாம். அங்கிருக்கும் பூங்கா, மீன் காட்சியகம் முதலியவற்றை கண்டு களிக்கலாம். பின்னர் டாப் ஸ்லிப் சென்று பார்த்துவிட்டு பொள்ளாச்சி வழியாக ஊர் திரும்பலாம். இந்த பணம் உங்கள் நினைவில் எப்போதும் தங்கி இருந்து நினைக்கும் போதெல்லாம்த இன்பத்தைக் கொடுக்கும். விடுமுறை நாளில் மிஸ் பண்ணாம சென்று வாருங்கள்.