முகப்பு » புகைப்பட செய்தி » Coimbatore » பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

Coimbatore District : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.

 • 15

  பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

  மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.

  MORE
  GALLERIES

 • 25

  பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

  தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர துவங்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 97.5 அடியை கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

  தற்போது 12 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதன் நீர் வரத்தான வினாடிக்கு 12,000  கனஅடி தண்ணீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

  அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் பவானியாற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  பில்லூர் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி உபரி நீர் திறப்பு.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

  ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES