முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ வேலை நடப்பதால் சென்னையில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

 • 19

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 29

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் என்று மூன்று வழித்தடங்களில் மெட்ரோ வரவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  வரும் 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மெட்ரோ கட்டுமான பணிகள் காரணமாக நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 49

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், "கோடம்பாக்கம் (R-2) போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைபெறுவதால், ஆற்காடு சாலையில் தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 59

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் - ஆற்காடு சாலையிலிருந்து, வரக்கூடிய வாகனங்கள், சைதாப்பேட்டை சாலை வலதுபுறம் நோக்கி செல்வதற்குத் தடை செய்யப்படுகிறது. சைதாப்பேட்டை சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், துரைசாமி சாலை, சன்னதி சாலை மற்றும் 2 வது அவின்யூ வழியாக செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  துரைசாமி சாலையிலிருந்து, சன்னதி தெரு செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் காலை, மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. சன்னதி தெருவிலிருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் மற்றும் இடதுபுறம் திரும்பி தாங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 79

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  சைதாப்பேட்டை சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த புதிய போக்குவரத்து மாற்றங்களால் தடை செய்யப்படுகிறது .

  MORE
  GALLERIES

 • 89

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  100 அடி சர்வீஸ் சாலையிலிருந்து, முத்தாலம்மன் சாலை சென்று சைதாப்பேட்டை சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  ரூட் மாறுது.. மெட்ரோ வேலை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

  முதலில் 10 நாட்களுக்குச் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், இது வெற்றிகரமாக இருந்தால் இப்பகுதியில் கட்டுமான பணிகள் முடியும் வரை போக்குவரத்து தொடர்ந்து அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES