முகப்பு » புகைப்பட செய்தி » சென்னை » திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்குள் நுழைந்த திருடன் வீட்டிலுள்ள பீரோவை திறந்து 49 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார்.

 • 16

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  அடையாறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பணத்தை திருடி விட்டு மதுபோதையில், வீட்டிலேயே படுத்து உறங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 26

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வசித்துவரும் வயதான தம்பதி கோயில் வழிபாட்டுக்காக வாரணாசி சென்றிருந்தனர். இதனிடையே, பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்த தம்பதி மகன், வீட்டு கதவை திறந்து வைத்து உறங்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 36

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் வீட்டிலுள்ள பீரோவை திறந்து 49 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார். இந்த நிலையில் வாரணாசியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய தம்பதி, தங்களது படுக்கையறைக்கு சென்றபோது கட்டிலின் கீழே குறட்டை சத்தம் வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  கட்டிலின் கீழே பார்த்தபோது பணத்தோடு திருடன் மதுபோதையில் படுத்திருந்தார். அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கத்தி கூச்சலிட சட்டென்று விழித்துக்கொண்ட திருடன் அங்கிருந்து தப்பியோடினார்.

  MORE
  GALLERIES

 • 56

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  உடனடியாக இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அருகே உள்ள குடியிருப்புகளில் சோதனை நடத்தினர். இதில் தப்பி ஓடிய திருடன், மதுபோதை மயக்கத்தில் அருகில் இருந்த மொட்டை மாடியில் படுத்திருந்த போது பிடிபட்டார்.

  MORE
  GALLERIES

 • 66

  திருட வந்த வீட்டில் மதுபோதையில் குட்டி உறக்கம்... குறட்டை சத்தத்தால் சிக்கிய விநோத சம்பவம்..!

  விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஏழுமலையிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES