இந்த 10 பேருந்துகளும், அம்பத்தூர் - வேளச்சேரி, திருவொற்றியூர் - கோவளம், சென்ட்ரல் பணிமனை - அண்ணா சதுக்கம், தாம்பரம் - மாமல்லபுரம், பிராட்வே - பூந்தமல்லி, திருவொற்றியூர் - திருவான்மியூர், கலைஞர் நகர் - கேளம்பாக்கம், திருவொற்றியூர் - பூந்தமல்லி, திருவான்மியூர் - மாமல்லபுரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் இருந்து இந்த பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் தலைமையில், போக்குவரத்து ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும், வருங்காலங்களில் தமிழக அரசின் மற்ற துறைசார்ந்த திட்டங்களும் பேருந்துகளில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.