முன்னதாக பெண்களுக்காக நடத்தப்பட்ட கோலா போட்டி, பொங்கல் போட்டி, கயிறிழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் ஆகியவற்றில் வெற்றி பெற்ற தனி நபர்களுக்கும், சுய உதவி குழுவினருக்கும் செம்மஞ்சேரி உதவி ஆணையர் ரியாசுதின் மற்றும் ஆய்வாளர் நடராஜன் இருவரும் பரிசு மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினர். தொடர்ந்து சிறப்பாக நடனமாடிய 4 சிறுமியர்களுக்கு ஆய்வாளர் நடராஜன் தலா 500 ரூபாய் வழங்கி வாழ்த்து தெரித்தார்.