முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சில தினங்களுக்கு முன் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சர்த்கர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
குறிப்பாக நம்பர் பிளேட்டில் போலீஸ், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்கள், நம்பர் பிளேட்டில் நடிகர்களின் புகைப்படங்கள் பதிந்த இருசக்கர வாகனங்கள் என விதிமுறைகள் மீறி நம்பர் பிளேட் வைத்திருந்த காவலர்கள் ஊடகத்துறையினரின் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் ஒட்டி நடவடிக்கை எடுத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.