ஹோம் » போடோகல்லெரி » சென்னை » சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள அரவாணி ஆர்ட் புராஜக்ட் என்ற தொண்டு நிறுவனம் திருநங்கைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுவர் ஓவிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 • 17

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  மாநகரில் ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பல்வேறு கட்டிட முகப்புகள், சுற்றுச்சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ண மயமான ஓவியங்களை திருநங்கைகள் வரைந்து அசத்தி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 27

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  அந்த சுவர் ஓவியங்களை காண்பதற்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்றது. இவ்வாறு சுவர் ஓவியம் தீட்டும் பணியில் தொழில் முறை ஓவியர்களை தாண்டி, பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இந்த ஓவிய பணியில் தற்போது திருநங்கைகளும் இணைந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 37

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள அரவாணி ஆர்ட் புராஜக்ட் என்ற தொண்டு நிறுவனம் திருநங்கைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுவர் ஓவிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சமீபத்தில் வரைந்துள்ள ஐந்தினை சுவரோவியங்கள் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

  MORE
  GALLERIES

 • 47

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  இதுகுறித்து சுவர் ஓவியம் வரையும் பணியில் ஈடுப்பட்டுள்ள காஞ்சனா கூறுகையில், கடந்த எட்டு வருடமாக ஸ்டேஜ் டான்ஸ்  நிகழ்ச்சிகளில் பனியாற்றி வந்தேன். இந்த நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பெங்களூரை தலைமை இடமாகக் கொண்ட அரவாணி ஆர்ட் பிராஜக்ட் அமைப்புதான் திருநங்கைகளை ஒருங்கினைத்து சுவர் ஓவிய பயிற்சிகளை வழங்கியது. இந்த அமைப்புடன் இணைந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன்.

  MORE
  GALLERIES

 • 57

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  ஒவ்வொரு மாநிலத்திலும் அரவாணி பிராஜக்ட் குழுக்கள் உள்ளன அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரங்களை தொடர்ந்து சுவர் ஓவியங்களாக வரைந்து வருகின்றோம். சென்னையில் நாங்கள் எட்டு பேர் கொண்ட குழு இந்த ஓவியப் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், அதனைத் தொடர்ந்து தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவர் ஓவியங்கள் வரைந்து உள்ளோம்.

  MORE
  GALLERIES

 • 67

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  சென்னையில் தமிழ் கலாச்சாரங்கள் பற்றி ஓவியங்களை வரைந்து வருகிறோம். தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐந்திணைகளாகிய குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை, மருதம் ஆகிய அதை குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டன  இந்த சமூகத்தில் இன்னமும் திருநங்கைகளுக்கு பல அவமானங்கள், ஒதுக்குதல் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதையும் தாண்டி திருநங்கைகளாலும் சாதிக்க முடியும் என்ற ஒரு எண்ணத்தோடு தான் இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

  MORE
  GALLERIES

 • 77

  சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகளால் வரையப்பட்ட அழகிய ஓவியங்கள்

  இது போன்ற வாய்ப்புகள் எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்து உள்ளோம். பொதுமக்கள் எங்கள் மீது வைத்துள்ள பார்வையை முற்றிலும் மாற்ற வேண்டும் தமிழக அரசு எங்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.ஸ்மித்தா அபிமுக்தா கூறுகையில்,அரவாணி ஆர்ட் பிராஜக்ட் நிறுவனம் திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக சென்னையில் கண்ணகி நகர், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் ஓவியம் வரையும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்  இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளோம். பொதுமக்கள் எங்களை ஊக்கப்படுத்தினால்  திருநங்கைகள் தங்களை மாற்றிக் கொண்டு வர முடியும்.இனிவரும் இளைய தலைமுறைகளுக்கு அரசு வழி வகுத்து கொடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

  MORE
  GALLERIES