தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக வதந்தி பரவி பல குழப்பங்கள் உண்டாகிய நிலையில் கட்டிட நிறுவன உரிமையாளர் தனது வீட்டு சுப நிகழ்ச்சிக்குப் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்திருந்தார். புலம்பெயர் தொழிலாளர்களும் சகோதரத்துவத்துடன் கையில் சீர் வரிசையுடன் வந்தது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.