சென்னை பயணிகள் எளிமையாக பயணம் மேற்கொள்ள சிங்காரச்சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகிய 3 பயணங்களுக்கும் இந்த ஒரே கார்டை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த திட்டம் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால் இப்போதைக்கு இந்த அட்டையை வைத்து மெட்ரோவில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
அடுத்த இரண்டு மாதத்தில் புறநகர் ரயிலில் இது கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் வேகம் எடுக்கப்பட்டுள்ளது. புறநகரில் தவிர்த்து சென்னை மாநகரப் பேருந்துகளில் கொண்டு வருவதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும். பத்து மாதத்திற்குள் இதற்கு தேவையான கருவிகளை வாங்கிய பிறகு இந்த அட்டையை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த அட்டையை ஏப்ரல் 17-2023 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறலாம். குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளபடும். இதற்காக டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த அட்டையை சென்னை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த ஒரு மெட்ரோவுக்கும் பயன்படுத்த முடியும்