ஹோம் » போடோகல்லெரி » Chennai » நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

Kasimedu Fish market:  வவ்வால்,வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் கடந்த வாரத்தை விட கிலோ ரூ. 100முதல் ரூ. 200 வரை அதிகமாகவே விற்பனையானது .

 • 15

  நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

  காசிமேடு மீன் சந்தையில் நள்ளிரவு முதலே மீன் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் மார்க்கெட் களை கட்டியது. கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று உயர்ந்ததால் விசைபடகு மீன்பிடி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

  MORE
  GALLERIES

 • 25

  நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

  தமிழகத்தில்  மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக காசிமேட்டில்  மீன்களின் விலை குறைவாக  காணப்பட்டு வந்த நிலையில் தற்போது  மீன்களின் விலையானது சற்றே  அதிகரித்துள்ளது. மீன்களின் வரத்தும் அதிக அளவிலேயே காணப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

  பெரிய விசைப்படகுகள்,  நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இன்று மீன்களை பிடித்து விற்பனைக்காக கரைக்கு திரும்பின.  இருப்பினும் கடந்த வாரங்களை போலவே பெரிய வகை மீன்கள் அதிகமாக கிடைக்கவில்லை. எனினும்,   வவ்வால்,வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் கடந்த வாரத்தை விட கிலோ ரூ. 100முதல் ரூ. 200 வரை அதிகமாகவே விற்பனையானது .

  MORE
  GALLERIES

 • 45

  நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

  இது ஒரு புறத்தில் இருந்தாலும் சிறியவகை மீன்களான சங்கரா, கொடுவா, பாறை போன்றவை 50முதல் 100ருபாய் விலை உயர்ந்து விற்பனையானது. இது போன்ற சிறிய அளவிலான விலையேற்றம் விசைப்படகு உரிமையாளர்களை சற்றே மகிழ்வடைய செய்தது

  MORE
  GALLERIES

 • 55

  நள்ளிரவு முதலே களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்

  மீன்களின் விலைப்பட்டியல்: வஞ்சிரம் கிலோ 1300 , பர்லா கிலோ  380, சங்கரா கிலோ 350,   தோல் பாறை கிலோ 350, தேங்காய் பாறை கிலோ 800, கடம்மா கிலோ 380, நெத்திலி கிலோ 200,  வெள்ளை ஊடான் கிலோ 150, இறால் நண்டு போன்றவை 400 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

  MORE
  GALLERIES