கட்டட இடிபாடுகளில் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இடிந்த கட்டடத்தினுள் கூரியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அதில் இன்று ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததாகவும் சொல்கிறார்கள்.
வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு, சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளார். பாரிமுனையைச் சேர்ந்த ராயல் ஸ்டீல்ஸ் என்ற இரும்பு கடையின் உரிமையாளர் பரத் என்பவருக்கான கட்டடம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.