பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை தியாகராய நகரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.   இதனை ஒட்டி புத்தாடைகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனை ஒட்டி புத்தாடைகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். தியாகராய நகரில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் போலீசார் சீருடை இல்லாமல் கண்காணித்த வருகின்றனர். தியாகராய நகரில் மக்கள் கூட்டம் சாலையை கடக்க காத்திருந்த மக்கள் கூட்டம் ரங்கநாதன் தெருவில் திரும்பும் திசையெல்லாம் மனித தலைகளாகவே காணப்பட்டது. சிசிடிவி வைத்தும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வார இறுதி மற்றும் விடுமுறை தினம் என்பதால் மக்கள் தியாகராய நகரில் அதிகளவில் குவிந்திருந்தனர்.