மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய நாட்டிய விழாவை, தமிழக அமைச்சர்கள் ராமச்சந்திரன், மற்றும் அன்பரசன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
2/ 7
பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கி வரும் ஜனவரி மாதம் வரை நாட்டிய விழா நடத்தப்படுகிறது.
3/ 7
மத்திய - மாநில அரசு சுற்றுலாத்துறைகள் இணைந்து நடத்தும் இந்த விழாவில், பரதம், கரகம், காவடி, ஒயிலாட்டம் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குச்சிப்புடி, கதகளி, பறைஇசை, ராஜஸ்தானி, ஒடிசி உள்ளிட்ட 60 கலைகள் அரங்கேற்றப்படும்.
4/ 7
இந்த ஆண்டு விழா நேற்று முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், ஆகியோர் இன்று குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கிவைத்தனர்.
5/ 7
முதல்நாள் முதல் நிகழ்ச்சியாக சென்னை அரசு இசைக்கல்லூரி மாணவர்களின் நாதஸ்வரம் கச்சேரியும், இரண்டாம் நிகழ்ச்சியாக மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும் அதை தொடர்ந்து பிரியதர்ஷினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது
6/ 7
இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சுற்றுலா துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் S.S.பாலாஜி, வரலட்சுமி உள்ளாட்சி பிரிதிநிதிகள் பங்கேற்றனர்.
7/ 7
மேலும், உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு நாட்டிய விழாவை கண்டுகளித்தனர்.