என்ன தான் சிறிய தொழிலாக இருந்தாலும் குறைந்தபட்ச முதலீடு தேவைப்படும். ஆனால் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யாமல் லட்சங்கள் சாம்பதிப்பது என்பது சாத்தியாமா என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். இதற்கு முதலீடு தேவையில்லை ஆனால் திறமையும், தனிப்பட்ட சிந்தனையும் இருந்தால் கண்டிப்பாக இந்த தொழில் மூலம் நீங்கள் லட்சங்களை சம்பாதிக்கலாம். அதில் ஒன்று தான் சோசியல் மீடியா.
தற்போது பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து தங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால் அனைத்து கணக்குகளும் அவர்களின் பெயரில் தோன்றினாலும் அவை வேறொருவரால் நிர்வகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடும் போது அவர் தமிழில் ட்வீட் செய்கிறார். இதை அவரே தமிழ் தெரிந்து டைப் செய்து போடுவதில்லை. தமிழ் நன்றாக தெரிந்த அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் ஆர்வமாகவும் ரசிகர்களை ஈர்க்கும்படி கவர்ச்சியாக பதிவிடும் ஒருவரை அவர் தனது சமூக வலைதள பக்கத்திற்காக பயன்படுத்துகிறார்.
உங்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றிய அறிவும், கணக்குகளை நிர்வகிப்பதில் ஆர்வமும் இருந்தால், பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகளுக்கு நீங்கள் நிர்வாகியாக செயல்படலாம். அதற்கு அதிக முயற்சி தேவை என்று நினைப்பது தவறு. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வீட்டில் உட்கார்ந்து கணினி முன் அமர்ந்து அவர்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் பிற பதிவுகள் மற்றும் வீடியோக்களை உங்கள் சமூக ஊடக கணக்குகளில் சுவாரஸ்யமாகவும் கவர்ச்சியாகவும் பதிவேற்றலாம்.
மேலும் போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டிங் பற்றிய அறிவு இருந்தால் இந்த வேலையில் சிறந்து விளங்கலாம். உங்கள் செயல்திறன் மற்றும் நீங்கள் பணிபுரியும் நபரின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். இருப்பினும், முதலில் சிறிய அளவிலான நபர்களுக்கு சமூக ஊடக நிர்வாகியாக பணிபுரிந்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
இதில் பிரபலமானால், ஒரே நேரத்தில் பல சமூக ஊடக கணக்குகளை பராமரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது உங்களுக்கு கீழ் சிலரை வேலைக்கு அமர்த்தி உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். அதனால் லட்சங்கள் சம்பாதிக்கலாம். இருந்தாலும்.. முதல் வாய்ப்பு கிடைத்து திறமையை நிரூபிக்கும் வரை கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக, ஏற்கனவே இதுபோன்ற பணிகளைச் செய்து வருபவர்களைச் சந்தித்து, பிரபலங்களை அணுகி, வாய்ப்புக் கோர வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் சில நாட்கள் இலவசமாக வேலை செய்ய தயங்காதீர்கள்.