பெரு நகரங்களில் இருப்பவர்களுக்கு ஏர் ப்யூரிஃபையர்கள் மிகவும் அவசியம். ஆனால் ஏர் ப்யூரிஃபையர்களின் விலை அதிகம் என்பதால் பலரும் அதை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் இனி கவலையே இல்லை யார் வேண்டுமானாலும் ஏர் ப்யூரிஃபையர் வாங்கலாம். ஆம் மிகவும் கம்மியான விலையில் இரண்டு விதமான ஏர் ப்யூரிஃபையர்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோமி நிறுவனம்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி டிவி, ஏசி மற்றும் ஏர் ப்யூரிஃபயர் தயாரிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் ஜியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4, 360 டிகிரியில் மாசுக்காற்றை ஃபில்ட்ர் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ. 50,000 விலையில் விற்பனையாகும் டைசன் ஏர் ப்யூரிஃபயருக்கு நிகரான அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த ஜியோமி ஏர் ப்யூரிஃபையர். இந்த ஏர் ப்யூரிஃபயர் பாக்ஸி டைப்பில் ஆல்-ஒயிட் நிறத்தில் இருக்கிறது. முன்பக்கத்தில் OLED டிஸ்ப்ளே இண்டிகேட்டர் உள்ளது. இதற்கு கீழ் நான்கு புறத்திலும் டிரிபிள் லேயர் ஃபில்ட்ரேசன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் வைரஸ் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து வகையான மாசு காற்றையும் உள்ளிழுத்துக் கொண்டு 99.97 சதவிகித தூய்மையான காற்றை வெளியேற்றும் என்று கூறப்படுகிறது. இந்த ஏர் ப்யூரிஃபையர் 310 சதுர அடி பரப்பளவில் ஏற்படும் காற்றுமாசை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 -இன் விலை ரூ.13,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 லைட்-ன் விலை ரூ.9,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு கம்மியான விலைக்கு கிடைப்பதால் ஜியோமி ஏர் ப்யூரிஃபையரை வாங்குவது எல்லோருக்கும் சுலபம். விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த ஏர் ப்யூரிஃபையர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு பயன் உள்ள ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்பெல்லாம் ஏசி மெசின்களிலேயே ஏர் ப்யூரிஃபையர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் அதிக காற்று மாசு காரணமாக இப்போது தனியார் ஏர் ப்யூரிஃபையர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.