முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

ரயில் பெட்டிகளுக்கு அதன் தரம் மற்றும் உழைக்கும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறங்கள் கொடுக்கப்படுகின்றன.

  • 17

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    ரயிலில் நீலம் மற்றும் சிவப்பு நிற பெட்டிகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரும்பாலான ரயில்களில் நீல நிற பெட்டிகள் உள்ளன. ஆனால் ராஜ்தானி மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் உள்ளிட்ட பிரீமியம் வகுப்பு ரயில்களில் சிவப்பு வண்ண பெட்டிகள் உள்ளன. இதில் நிற வித்தியாசம் மட்டுமே இருக்கும் என்று பெரும்பாலான பயணிகள் நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை. இந்த இரண்டு கோச்சுகளும் பாதுகாப்பு மற்றும் வசதியின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

    MORE
    GALLERIES

  • 27

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    கடந்த சில ஆண்டுகளில், ரயில்வேயின் பெட்டிகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு காலத்தில், ரயிலின் பெட்டிகள் வெளிர் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தது. பின்னர் நீல நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. அதன் பிறகு இப்போது சிவப்பு நிற பெட்டிகள் அதிகமாகத் பயன்படுத்தப்படுகின்றன. நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் இந்த கோச்சுகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 37

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். எனவே ரயில்தான் நாட்டின் பரபரப்பான போக்குவரத்து சாதனம். அதனால்தான் இந்திய ரயில்வே குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்பாட்டில் இருக்கும் ரயில் பெட்டிகளை சேவைகளில் இருந்து அகற்றி, அவற்றின் இடத்தில் புதிய பெட்டிகள் பயன்படுத்துகின்றன. இந்திய ரயில்வேயில் 2 வகையான கோச்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ICF (Integral Coach Factory) மற்றும் LHB (Linke Hofmann Busch) கோச்சுகள்.

    MORE
    GALLERIES

  • 47

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    ICF பெட்டிகள் எஃகுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை  25 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. எனவே இந்த காலம் வரை அவை பயணிகள் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் அவை சேவையிலிருந்து விலக்கப்படுகின்றன. அதேசமயம், எல்எச்பி பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்டவை. அதனால் அவை 30 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை.

    MORE
    GALLERIES

  • 57

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    தற்போது, ​​பெரும்பாலான ரயில்களில் சிவப்பு நிற LHB பெட்டிகள் உள்ளன. மெயில் எக்ஸ்பிரஸ், சூப்பர்ஃபாஸ்ட், ராஜ்தானி, சதாப்தி, டோர்டன் மற்றும் தேஜாஸ் போன்ற அனைத்து ரயில்களிலும் LHB பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 30 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், பயணிகள் ரயில்களில் இருந்தும் அவை அகற்றப்படுகின்றன.

    MORE
    GALLERIES

  • 67

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    ICF கோச்சுகளை விட LHB பெட்டிகள் சிறந்தவை மற்றும் பாதுகாப்பானவை. LHB பெட்டிகள் ஆன்டி டெலஸ்கோபிக் வடிவமைப்பின் கீழ் கட்டப்பட்டுள்ளன. அதாவது விபத்து ஏற்பட்டால் அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை. அதோடு எளிதில் கவிழாது. LHB பெட்டிகள் துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏற்படும் தாக்க எதிர்ப்பை அதிகரிக்கிறது. சுமந்து செல்லும் திறனையும் அதிகரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    ரயில் பெட்டிகளின் நிறம் ஏன் வேறுபடுகின்றன? தெரிந்து கொள்ளுங்கள்

    LHB பெட்டிகளில் உள்ள இணைப்பு அமைப்பு இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள சார்பு இயக்கத்தை குறைக்கிறது மற்றும் விபத்து ஏற்பட்டால் ஒரு பெட்டியை மற்றொன்றை மோதவிடாமல் தடுக்கிறது. LHB பெட்டிகளின் சராசரி வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர். அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிலோமீட்டர். ICF பெட்டிகளின் சராசரி வேகம் 70 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்ச வேகம் 140 கிலோமீட்டர் ஆக உள்ளது.

    MORE
    GALLERIES