முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருவது என்று முடிவு செய்து விட்டாலும், எந்தத் திட்டத்தில் இணைவது, ஏந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது இளைஞர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கான ஆலோசனைகளை இப்போது பார்க்கலாம்.

  • 17

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய இளைஞர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு அந்த நிறுவனத்தின் சார்பிலேயே மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டிருக்கும். அதே சமயம், சின்னஞ்சிறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் மற்றும் அமைப்பு சாரா பணியாளர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவக் காப்பீடு இருப்பதில்லை.

    MORE
    GALLERIES

  • 27

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    காப்பீடு குறித்து போதுமான விழிப்புணர்வு இருந்தாலும் கூட, அது தற்போதைய வயதில் தங்களுக்கு பலன் உள்ளதாக இருக்காது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர். ஆனால், இளம் வயதிலேயே காப்பீட்டுத் திட்டங்களில் சேரும்போது எதிர்பாராத மருத்துவ சிகிச்சைக்கு பயனுள்ளதாக அது அமையும் என்பதை பலரும் உணருவதில்லை. அத்துடன் சிறு வயதிலேயே காத்திருப்பு காலத்தை கடந்து விடுவதால் நோய் அபாயம் கொண்ட வயதில் அச்சமின்றி வாழ இது உறுதி செய்கிறது.

    MORE
    GALLERIES

  • 37

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    கொரோனா பெருந்தொற்று உலகத்தை முடக்கிப் போட்ட நிலையில், இப்போதெல்லாம் அனைத்து வயதினரையுமே நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டியிலும் பெரும் நோய்கள் தாக்குகின்றன. மக்கள் தொகையில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை சுமார் 52 சதவீதம் கொண்டுள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் மருத்துவக் காப்பீடு அவசியமானதாகும்.

    MORE
    GALLERIES

  • 47

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    இளம் வயது பலன் : ஒவ்வொரு காப்பீட்டுத் திட்டத்திலும் காத்திருப்பு காலம் கட்டாயமாகும். சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரையில் இருக்கலாம். இளம் வயதிலேயே காப்பீட்டில் இணைவதால் இந்த காலத்தை எளிதில் கடந்து வரலாம். அதிக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குறைவான நோய் அபாயம் கொண்ட வயது பிரிவில் இருப்பதால் உங்களுக்கு குறைவான ப்ரீமியம் கட்டணத்தில் பெரிய அளவுக்கான காப்பீடு கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    புறநோயாளிகள் கவரேஜ் : முன்பெல்லாம் மருத்துவக் காப்பீடு என்றாலே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பொருந்தும் என்று கூறுவார்கள். ஆனால், இப்போது அப்படியல்ல. மருத்துவரை பார்ப்பது, ஆய்வக பரிசோதனைகள், வாடிக்கையான மருத்துவ பரிசோதனைகள், தொலைபேசி வாயிலான மருத்துவ ஆலோசனை போன்ற பலவற்றுக்கு மருத்துவ காப்பீடு பொருந்துகிறது.

    MORE
    GALLERIES

  • 67

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    அளவில்லா காப்பீடு பலன் : நீங்கள் காப்பீடு திட்டத்தில் சேரும்போது உங்கள் வயது, குடும்ப மருத்துவ பின்னணி, வாழ்வியல் பழக்க வழக்கம் உள்பட பல சூழ்நிலைகள் ஆராயப்படுகின்றன. சில சமயம் நீங்கள் தேர்வு செய்திருக்கும் திட்டத்தின் கீழ் காப்பீடு பணம் போதுமானதாக இருக்காது. அதுபோன்ற சமயங்களில் பல திட்டங்களுக்கு 100 சதவீத ரெஸ்டோரேஷன் வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    இளைஞர்களுக்கான அலார்ட்..! மெடிக்கல் இன்சூரன்ஸ் வச்சிருக்கிங்களா..? இத செக் பண்ணிக்கோங்க..

    பிரசவ செலவுகள்  : இளம் வயதிலேயே காப்பீட்டு திட்டத்தில் இணைபவர்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது பிரசவ செலவுக்கான காப்பீட்டை பெற முடியும். பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆம்புலன்ஸ் கட்டணம், குழந்தையின் தொப்புள் கொடி பாதுகாப்பு உள்பட பல செலவினங்களுக்கு காப்பீடு பெற முடியும்.

    MORE
    GALLERIES