முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

Demonetisation | செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் தங்களது வழக்கமான பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

  • 16

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் ரூ,2,000 நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்த அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவிட்டது.

    MORE
    GALLERIES

  • 26

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்திருந்த பலரும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பீதியடைந்தனர். ஆனால் 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்ததை போல் தற்போது அதிரடியாக அறிவிக்கவில்லை. மாறாக மக்கள் தங்கள் வசம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 36

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    இது தவிர வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் தங்களது வழக்கமான பரிவர்த்தனைகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. க்ளீன் நோட் பாலிசியின் படி ரூ.2000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. உங்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா.. நீங்கள் இப்போது செய்ய வேண்டிய 3 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை உங்களது பேங்க் அக்கவுண்டிலேயே இப்போது நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம். உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு வரம்பு ஏதும் இல்லை, உங்களிடம் எவ்வளவு நோட்டுகள் இருக்கிறதோ அத்தனையையும் டெபாசிட் செய்யலாம். எனினும் வங்கி விதிகளின்படி, ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு நீங்கள் Pan மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 56

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    வரும் செப்டம்பர் 30 வரை அருகில் உள்ள எந்த ஒரு வங்கிக்கும் சென்று கூடுதல் கட்டணம் ஏதுமின்றி உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் 10 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். அதாவது இருபதாயிரம் ரூபாய் வரை மட்டுமே, இரண்டாயிரம் நோட்டுகளை மாற்றி கொள்ள முடியும். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றும் போதோ அல்லது டெபாசிட் செய்யும் போதோ நீங்கள் படிவம் அல்லது அடையாள சான்று என எதையும் சமர்ப்பிக்க தேவை இல்லை.

    MORE
    GALLERIES

  • 66

    உங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை என்ன செய்வது என யோசனையா? இதை செய்யுங்கள்!

    உங்களிடம் மிக குறைந்த அளவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தால் நீங்கள் அவற்றை வழக்கமான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி கொள்ளலாம். பெட்ரோல் பங்க், மளிகை கடை அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வாங்கும் போது என இரண்டாயிரம் நோட்டுகளை தயக்கமின்றி வாங்கும் இடங்களில் பரிவர்த்தனைக்கு உங்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES