முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

Union Budget 2023 : மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விலை உயரும் பொருட்கள் மற்றும் விலை குறையும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

  • 17

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    தொலைக்காட்சி பேனல்களுக்கான சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 2 புள்ளி 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தொலைக்காட்சிகளின் விலை குறைகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    குறிப்பிட்ட சில செல்போன் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் செல்போன்களின் விலையும் குறையவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    இதே போன்று, வேளாண் மற்றும் ஜவுளி அல்லாத பிற பொருட்களின் இறக்குமதி சுங்கவரி 21 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சைக்கிள், பொம்மைகள் உள்ளிட்டவற்றின் விலையும் குறைகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    மேலும், கிளிசரின் கச்சா, ரசாயனங்கள் தயாரிக்கப் பயன்படும் எத்தில் ஆல்கஹால் உள்ளிட்டவற்றின் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    கேமரா லென்ஸ் உதிரிப்பாகங்கள், எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப்பொருளுக்கு மேலும் ஓராண்டுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    சிகரெட்டுகளுக்கான சுங்க வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் இறக்குமதி சிகரெட் விலை உயரவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    மத்திய பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி : எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?

    கிச்சன் எலக்ட்ரிக் சிம்னிகளுக்கான சுங்கவரி 7 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுவதால் அதன் விலையும் உயர்கிறது. மேலும், கலவை ரப்பருக்கான இறக்குமதி வரியும் 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES