இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன் படி அந்த ஆணையத்தால் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை வீட்டில் இருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் வழங்கும் ஆணையம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் மாற்றம் செய்யலாம். வெளியான புதிய செய்தியில், மக்கள் 1947 என்ற ஆதார் ஹெல்ப்லைன் எண்ணை டயல் செய்து ஆதாரின் பல சேவைகளைப் பெறலாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது. இது ஒருபுறமிருக்க ஆதார் எண் பெற்ற ஒவ்வொருவரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு கூறியுள்ளது.
அதாவது ஆதாரில் திருத்தம் செய்வதற்கும் ஆதாரை புதுப்பிக்கவும் வித்தியாசம் உள்ளது. ஏற்கெனவே ஆதாரை பதிவு செய்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்பதே அறிவிப்பு ஆகும். அதாவது பெயருக்கான அடையாள சான்று மற்றும் முகவரிக்கான அடையாள சான்று இரண்டையும் பதிவு செய்வதே புதுப்பிப்பது ஆகும். வரும் ஜூன் 14ம் தேதி வரை myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை எந்த வித கட்டணமும் இல்லாமல் புதுப்பிக்கலாம்.
ஆதாரில் உங்கள் பெயர், பிறந்த தேதி,முகவரி விவரங்கள் தவறாக இந்தால் ஆதார் புதுப்பித்தல் கூடாது. அந்த தவறுகளை திருத்தம் செய்த பிறகே புதுப்பிக்க வேண்டும். ஆதாருடன் செல்போன் இணைப்பில் குழப்பம், இணையத்தில் ஆதாரை புதுப்பிப்பதில் சிக்கல் என்றால் அருகில் உள்ள ஆதார் சேவை மையம் சென்று ரூ.50 கொடுத்து ஆதாரை புதுப்பிக்கலாம்.