முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

தனது ரோனின் பைக்கில் 4 கஸ்டம் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம். நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று டிவிஎஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் எஸ்10எக்ஸ் மற்றும் எஸ் 20எக்ஸ் ஆகிய ஹெல்மெட் கம்யூனிகேஷன் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. செய்தியாளார் : ரொசாரியோ ராய்

  • 16

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    டிவிஎஸ் நிறுவனம் கோவாவில் நடத்தி வரும் தனது மோட்டோ சோல் நிகழ்ச்சியானது டிவிஎஸ் பைக் ரசிகர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் போது டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்த விழாவின் முதல் நாளன்று தனது ரோனின் பைக்கில் 4 கஸ்டம் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ் நிறுவனம். நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று டிவிஎஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் எஸ்10எக்ஸ் மற்றும் எஸ் 20எக்ஸ் ஆகிய ஹெல்மெட் கம்யூனிகேஷன் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

    MORE
    GALLERIES

  • 26

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    இந்த கருவியை எந்த ஹெல்மெட்டில் வேண்டுமானாலும் ஃபிட் செய்து கொள்ளலாம். ஹெல்மெட்டில் பொருத்துவதற்கு வசதியாக கிளாம்ப் மற்றும் ஓட்டும் வகையிலான இரண்டு செட்டப்கள் உள்ளன. இந்த இரண்டு கருவிகளும் டிவிஎஸ் கனெக்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும். இந்த டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் ஏகப்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஒரு குழுவாக தனித்தனி பைக்கில் பயணம் செய்தால் அவர்கள் எல்லோரும் அணிந்திருக்கும் ஹெல்மெட்டிற்குள் இந்த ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் கருவியை பொருத்திவிட்டால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES

  • 36

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    இதன் மூலம் பயணம் சுவாரஸ்யமாகவும் இனிமையாகவும் அமையும். எஸ்10 எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகிய இரண்டு டிவைஸ்களிலும் X போன்ற 3 பட்டன்கள் நடுவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் லைட்டிங்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்10எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகிய ஆகிய இரண்டு கருவிகளும் முன்னர் சொன்னபடியே ஒரு குழுவாக செல்லும் போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள உதவும், கிட்டத்தட்ட ஒரு இண்டர் காம் போல இது செயல்படும். 20 ரைடர்கள் இதில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து கொள்ளலாம். சுமார் 1.2 கி.மீ இடைவெளி வரையில் உள்ள டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES

  • 46

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    இந்த கருவிகளை ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்து கொண்டு, கூகுள் அசிஸ்ட் அல்லது சிரி என நமக்கு எது தேவையோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்10எக்ஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகியவை மொபைல் ஜிபிஎஸ் நேவிகேஷன்களாகவும் பயன்படுத்த முடியும். அதுவும் செல்லும் பாதையில் இன்டர்நெட் வசதி இல்லை என்றாலும் நேவிகேஷன் செயல்படும். இந்த இரண்டு எக்ஸ் கனெக்ட் எஸ்10எஸ் மற்றும் எஸ்20எக்ஸ் ஆகியவற்றில் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்ட முடியும்.

    MORE
    GALLERIES

  • 56

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    அது மட்டுமல்ல இன்டர்காம் ஒர்க் ஆகும். அதே ஸ்பீக்கரில் பாடலும் கேட்க முடியும். இதற்காக டெர்ரா ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இண்டர்காம் பயன்படுத்தும் போது தானாக மியூசிக் சத்தத்தைக் குறைத்துக் கொள்கிறது. இந்த எக்ஸ் கனெக்ட் எஸ்10எக்ஸ் மற்றும் எக்ஸ் கனெக்ட் எஸ்20 எக்ஸ் ஆகிய இரண்டும் ஐபி 67 ரேட்டிங் கொண்டது.

    MORE
    GALLERIES

  • 66

    இனி கனக்டெட் தொழில்நுட்பத்துடன் புதிய ஹெல்மெட்டுகள்… டிவிஎஸ் அசத்தல் அறிமுகம்…

    இரண்டும் தூசு மற்றும் வாட்டர் ப்ரூஃப் கொண்டது. இதனால் ஹெல்மெட்டில் இதைப் பொருத்தி தூசு நிறைந்த பகுதியிலும், கொட்டும் மழையிலும் கூட பயன்படுத்த முடியும். இதன் விலையைப் பொருத்தவரை டிவிஎஸ் எஸ்10 எக்ஸ் 8499 ரூபாய் என்ற விலையிலும், டிவிஎஸ் எஸ்10எக்ஸ் ரூ.10,999 என்ற விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES