கோடை சீசன் என்பது பொதுவாக வெயில் வாட்டி வதைக்கும் சீசன் என்றாலும், பல்வேறு புதிய இடங்களுக்கு மற்றும் டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக செல்லும் விருப்பத்துடன் தொடர்புடையது. கோடை வெயில் தகிக்கும் போது மக்கள் பொதுவாக கூலிங்காக இருக்கும் மலைபிரதேசங்கள் அல்லது நாடுகளுக்கு செல்ல முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனை தொடர்ந்து உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான புக்கிங்ஸ் அதிகரித்து வருகின்றன. ஆயினும் தொடர்ந்து எகிறும் விமான கட்டணங்கள் பட்ஜெட் பார்த்து டூருக்கு பிளான் போடும் விமான பயணிகளை, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு டூர் செல்ல முடியாமல் தடுத்துள்ளன.
பட்ஜெட் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்திருக்கும் விமான கட்டணங்கள் காரணமாக பயணத் திட்டங்களை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ள பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், கவலை வேண்டாம். விமான டிக்கெட்டுகளை இலவசமாக அல்லது மிக அடிப்படையான கட்டணத்தில் எப்படி புக்கிங் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். கீழ் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் ஏர் மைல்ஸ்களை (Air miles) இலவசமாக குவிக்கலாம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சலுகைகளை அனுபவிக்கலாம்.
ஏர் மைல்ஸ்களை சம்பாதிக்க மற்றும் ரிடீம் (Redeem) செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே: ஏர்லைன் ரிவார்ட் பாயிண்ட்ஸ் : நீங்கள் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புக்கிங் செய்து விமானப்பயணம் மேற்கொள்ளும் போது, உங்களுக்கு ரிவார்ட் பாயிண்ட்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த Reward Points எதிர்காலத்தில் விமானங்களை புக்கிங் செய்வதற்காக Redeemed செய்து கொள்ளலாம். இவை இந்தியன் கரன்சியில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் அல்லது ஏர் மைல்ஸ் என குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு திட்டத்தின் கீழ், ஒரு ரிவார்ட் பாயிண்ட்டிற்கு 50 பைசா என நிர்ணயித்துள்ளது. ஏர் மைல்ஸ் என்பவை கிட்டத்தட்ட இலவச விமான பயணத்திற்கு சமமானவை.
ஏர் மைல்ஸ்களை ஈட்டுவதற்கான வழிகள் இங்கே :பொதுவாக ஏர் மைல்ஸ்களை ஈட்ட 3 வழிகள் உள்ளன. முதலாவதாக நீங்கள் பயன்படுத்தும் ஏர்லைனின் லாயல்டி திட்டத்தில் (Loyalty program) sign up செய்யலாம் மற்றும் உங்கள் ஃபிளைட் புக்கிங்ஸில் ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பெறலாம். இரண்டாவதாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை வழங்கும் Co-branded கிரெடிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
இறுதியாக ஹோட்டல்கள், கார் ரென்டல்ஸ் போன்ற விமான நிறுவனங்களின் பார்ட்னர் பிராண்டுகள் மூலம் நீங்கள் புக் செய்யலாம். மேலும் இந்த புக்கிங்ஸ்கள் மூலம் நீங்கள் ஏர் மைல்ஸ்களை பெறுவீர்கள். இந்த வழிகள் தவிர சில கிரெடிட் கார்டுகள் குறைந்த அல்லது பூஜ்ஜிய விலையில் (Zero costs) விமான டிக்கெட்டுகளுக்கு ரிடீம் செய்ய கூடிய பாயிண்ட்களை வழங்குகின்றன.