ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா ஆகியவை இணைந்து "ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா 40 & அண்டர் செல்ப் ரிச் லிஸ்ட் 2020" என்ற பட்டியலை அக்டோபர் 13 அன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 40 வயதிற்குட்பட்ட சுயமாக முன்னேறிய இந்திய தொழில் முனைவோருக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுய உழைப்பில் உருவான இந்த இளம் தலைவர்கள் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பட்டியலில் பிளிப்கார்ட் நிறுவனர்கள் மற்றும் புதிதாக சில பில்லியனர்களும் உள்ளனர். அவ்வாறு, இந்தியாவில் உயர்ந்து வரும் முதல் 10 தொழில்முனைவோர் மற்றும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட பட்டியலின் படி, தொழிலதிபர்கள் மொத்தமாக ரூ.44,900 கோடி சொத்துக்களை சேர்த்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 59 சதவீதம் அதிகரித்துள்ளது. வணிக தலைமையகம் பட்டியலில் அதிக நபர்களைக் கொண்ட நகரமாக 9 இடங்களை பெற்று பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் குருகிராமில் தலா இரண்டு தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலில் இருக்கும் தொழிலலதிபர்களின் சராசரி வயது 37 ஆக இருக்கிறது. மேலும், அவர்களில் இளைய தொழிலதிபர் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் ’ரித்தேஷ் அகர்வால் (வயது 26) ஆவார்.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ரீடைல் ஆகிய இரண்டும் தான் தொழிலதிபர்கள் சிறந்த பணக்காரர்களாக முக்கிய பங்களிப்பாளர்கள். இது குறித்து பேசிய ஹுருன் இந்தியாவின் எம்.டி மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத்," இந்த பட்டியல் இந்தியாவிலிருந்து வணிகத்தில் மிகவும் உயரும் நட்சத்திரங்களை குறிக்கிறது. முக்கிய வணிகங்களில் இருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளியேறியவர்களில் சிலர் பிற இளம் தொழிலதிபர்களை ஆதரிக்கும் முதலீட்டு நிதிகளை அமைத்து வருகின்றனர். இது நாட்டில் சீர்குலைக்கும் தொழிலதிபரின் வளர்ச்சியில் கூட்டு விளைவை ஏற்படுத்தும் என்று கூறினார்.