கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்ட நிலையில் தற்போது தங்கம் விலை ரூ.46,000 கடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகத் தங்கத்தில் விலை ரூ.46,000 க்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.   22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.83 குறைந்து 5,692 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536 ஆக விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து 4,663 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,304 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.40 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,400 எனவும் விற்பனையாகிறது.