மாத சம்பள காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரும் போது அடமானம் இல்லாமல் வங்கிகளில் வேகமாகக் கடன் பெறக்கூடிய ஒரு திட்டம் பர்சனல் லோன் (தனி நபர் கடன்). அடமான கடன்களை விட இதில் வட்டி விகிதம் சற்று அதிகம். இருந்தாலும் இந்தக் கடனை பெற வேண்டும் என்ற சூழலில் நாம் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
தகுதி: வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் பர்சனல் லோன் கால்குலேட்டரை சம்மந்தப்பட்ட இணையதளத்தில் அணுகி அதில் உள்ள கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கடன் பெறக்கூடிய தகுதியை சரிபார்க்க முடியும். பொதுவாகப் பர்சனல் லோனுக்கான தகுதி உங்கள் மாத வருவாய், திருப்பிச் செலுத்தக்கூடிய திறன், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை வைத்தே முடிவு செய்யப்படும்.