முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

கடந்த ஆண்டிலிருந்தே, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் ஒப்பிட்டு, பல வங்கிகளும் வைப்பு நிதிகளின் வட்டியை மாற்றியுள்ளன.

  • 18

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    முதலீடுகள் என்று வரும்பொழுது வங்கி வழங்கும் வைப்பு நிதிகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகை மற்றும் வைப்பு நிதியின் முதிர்வு காலம் ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதம் மாறுபடும். பெரும்பாலானவர்கள் வைப்பு நிதிகளை தேர்வு செய்வதால், வங்கிகள் அவ்வப்போது ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்து கூடுதல் வட்டி வழங்கும். இவை வங்கியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒரு சில வங்கிகள் ஸ்பெஷல் டெபாசிட்களை அறிமுகம் செய்திருந்தது. அவற்றின் கால அளவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி தரும் இந்த சிறப்பு வைப்பு நிதிகள் மற்றும் முதலீடு செய்ய கடைசி தேதி உள்ளிட்ட பிற விவரங்களை இங்கே பார்க்கலாம். கடந்த ஆண்டிலிருந்தே, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் ஒப்பிட்டு, பல வங்கிகளும் வைப்பு நிதிகளின் வட்டியை மாற்றியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 38

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    எஸ்பிஐ வங்கி வழங்கும் அம்ரித் கலாஷ் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அம்ரித் கலாஷ் என்ற டெர்ம் டெபாசிட் திட்டம் மிகவும் பிரபலமானது. இந்த திட்டத்தை எஸ்பிஐ வங்கி தற்போது மீண்டும் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 400 நாட்கள் நீங்கள் விரும்பும் தொகையை முதலீடு செய்யலாம். பிப்ரவரி 15, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் மார்ச் 31, 2023 முடியும் என்று வங்கி அறிவித்திருந்தது. ஆனால் மீண்டும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 400 நாட்கள் வரை முதலீடு செய்யப்படும் இந்த வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7. 60%, 60 வயதுக்கும் குறைவானவர்களுக்கு 7.10% வட்டியும் வழங்கப்படுகிறது

    MORE
    GALLERIES

  • 48

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    எஸ்பிஐ சர்வோட்டம் டெர்ம் டெபாசிட் : 15,00,000 ரூபாய்க்கும் குறைவாக வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் சர்வோட்டம் என்று கூறப்படுகிறது, இது இந்தியாவில் குடியிருப்பவர்களுக்காகவும் வெளிநாட்டு இந்தியர்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தில் முதிர்வு காலம் முடியும் வரை இதில் முதலீடு செய்த தொகையை திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவே இந்த திட்டத்தில் அதிகபட்ச வட்டி வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 30 அடிப்படை புள்ளிகள் மற்றும் 40 அடிப்படை புள்ளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஓராண்டு முதிர்வு காலம் மற்றும் இரண்டாண்டு முதிர்வு காலத்துடன் இந்த திட்டம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    ஐடிபிஐ வங்கி அம்ரித் மகோத்சவ் FD திட்டம் : இந்தியர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் இந்திய நிறுவனங்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்காகவும் ஐடிபிஐ வங்கி இந்த அம்ரித் மகோத்சவ் வைப்பு நிதி ஸ்கிம் என்ற முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 444 நாட்கள் ஆகும். இதில் 7.15% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் அவர்களுக்கு 7.65% வட்டி வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    இந்தியன் வங்கியின் சூப்பர் FD : “IND SUPER 400 DAYS” என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கால அளவை இந்தியன் பேங்க் நீட்டித்துள்ளது. இதில் 10 அடிப்படை புள்ளிகள் இன் அடிப்படையில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிமுகம் ஆன இந்த முதலீட்டு திட்டம் ஏப்ரல் 19 உடன் முடிகிறது என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்ச முதலீடு ரூ.10,௦௦௦ மற்றும் அதிக பட்ச முதலீடு 2 கோடி ரூபாய் ஆகும்.

    MORE
    GALLERIES

  • 78

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    PSB கிரஹ லக்ஷ்மி வைப்பு நிதி முதலீட்டு திட்டம் : 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், சிறுமிகள் (அதாவது மைனர்கள்) உட்பட எந்தப் பெண்ணின் பெயரிலும் இந்தக் கணக்கில் முதலீடு செய்யலாம். ஜாயின்ட் கணக்காக இந்த திட்டத்தில் சேர விரும்பினால், அதில் பிரைமரி ஹோல்டர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 551 நாட்கள் ஆகும். இந்த வைப்புத்தொகை ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக ரூ. 5000/- மற்றும் ஆயிர ரூபாய்களின் மடங்குகளாக டெபாசிட் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    அதிக வட்டி வேணுமா? எஸ்பிஐ முதல் இந்தியன் வங்கி வரை. தெரிஞ்சுக்க வேண்டிய வைப்பு நிதி விவரம்!

    மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டம் : எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள், மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்தின் கால அளவை நீட்டித்துள்ளது மற்றும், 7.50% வட்டி வழங்குகிறது. ஹெச்டிஎப்சி வங்கி, மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த FDஐ மார்ச் 31, 2023 அன்று நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES