பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைப்பவர்கள் அவர்கள் செய்ய போகும் பணிகள் சார்ந்த விதிகள் ஏதேனும் மாறி இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில புதிய விதிகள் அல்லது மற்றும் புதுப்பிக்கப்பட்ட விதிகள் நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறை மாற்றங்கள் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எல்பிஜி சிலிண்டர்கள், சிஎன்ஜி, பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் பொதுவாக நிர்ணயிக்கப்படும்.
எனவே ஒவ்வொருவரும் என்ன விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் 1-ஆம் தேதி முதல், இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வர உள்ள சில முக்கிய மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள மாற்றங்கள் கீழே:
பஞ்சாப் நேஷ்னல் பேங்க் ஏடிஎம் கார்டு: நீங்கள் பஞ்சாப் நேஷ்னல் பேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு இது முக்கியமான அப்டேட் ஆகும். ஏனென்றால் மோசடியில் இருந்து உங்களை பாதுகாக்க, டெபிட் கார்டை பயன்படுத்தி ATM-ல் பணம் எடுப்பதற்கான நடைமுறையை பஞ்சாப் நேஷ்னல் பேங்க் திருத்தியமைத்துள்ளது. இப்போது உங்கள் கார்டை ATM மெஷினில் இன்சர்ட் செய்த பின் , உங்கள் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பருக்கு OTP வரும். உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எடுக்க இந்த OTP-ஐ என்டர் செய்து வழக்கம் போல ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பயன்படுத்தவும்.
ஜீவன் பிரமான் (வாழ்க்கை சான்றிதழ்): ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30 நவம்பர் 2022 ஆகும். இந்தநிலையில் நவம்பர் 30 தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையென்றால் அவர்களது பென்ஷன் நிறுத்தப்படலாம்.
LPG விலைகள்: நவம்பர் மாதத்தில் கமர்ஷியல் LPG -யின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.115 வரை குறைக்கப்பட்டது. எனினும் கடந்த ஜூலை முதல் டொமஸ்டிக் LPG சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பரில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் (oil making companies) டொமஸ்டிக் சிலிண்டர்களின் விலையை குறைக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் அட்டவணையில் மாற்றங்கள்: டிசம்பர் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் தீவிரமாக தொடங்குகிறது. இந்த குளிர் சீசனில் மூடுபனியும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே பல ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பனிமூட்டம் காரணமாக ரயில்வே தனது நேர அட்டவணையை மாற்றும் என்பதால் டிசம்பர் மாதத்தில் ரயில்வே நேர அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, புதிய நேர அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் டிசம்பர் 1-ல் வெளியாகலாம்.
வங்கி விடுமுறைகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, டிசம்பர் மாதம் மொத்தம் 14 விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு இருக்கின்றன. இதில் வார இறுதி நாட்கள், இரண்டாவது/நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்கள் அடங்கும். எனவே பேங்கிற்கு செல்லும் முன் வேலை நாளா அல்லது விடுமுறை நாளா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு செல்லுங்கள்.