கிரெடிட் கார்டுகள் என்பது முன்கூட்டியே கடன் வரம்புகளுடன் நமக்கு வங்கிகளால் வழங்கப்படும் டிஜிட்டல் பணம் போன்றது. ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. இதனைப் பயன்படுத்தி நாம் வாங்க விரும்பும் பொருட்கள் அல்லது சேவையை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். பின்னர் அதனை EMI யாக மாற்றி, மாதந்தோறும் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
இதில் கூட்டிணைவு கிரெடிட் கார்டு அதாவது Co-branded Credit Cards சேவைகளை வழங்கும் சிறப்பான வங்கிகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட வணிக நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வங்கிகள் வழங்குகிற கிரெடிட் கார்டுகள், கூட்டிணைவுக் கடன் அட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
ஐசிஐசிஐ வங்கி | அமேசான் பே : ஐசிஐசிஐ வங்கி கூட்டிணைவு கிரெடிட் கார்டு அமேசானில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக், ப்ரைம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது. அமேசானில் உள்ள 100 க்கும் மேற்பட்ட பார்ட்னர் வணிகர்களுக்கு பணம் செலுத்தினால் 2 சதவிகிதம் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு 1 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அமேசான் இந்தியாவில் ஷாப்பிங் செய்யும் போது மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்குக்கான No cost EMI சேவையும் கிடைக்கிறது. இது வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கடன் அட்டை ஆகும்.
ஆக்சிஸ் பேங்க் | ஃபிளிப்கார்ட் : ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் பிளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா போன்ற ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்தால் 5 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புள்ளது. உபர், 1 எம்ஜி, கிளியர் ட்ரிப், க்யூர் பிட் போன்ற ஆன்லைன் தளங்களில் பயன்படுத்தும் போது 4 சதவீதம் வரை கேஷ்பேக் உடன் ஒரு கடன் அட்டைதாரருக்கு மட்டும் வருடத்தில் நான்கு உள்நாட்டு ஓட்டல்களில் தங்கும் வசதியும் கிடைக்கும். இந்தியாவில் பார்ட்னர் உணவகங்களில் உணவருந்தினால் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டிற்கான சர்வீஸ் கட்டணம் ஆண்டு ரூ.500 ஆகும்.
சிட்டி பேங்க் | இந்தியன் ஆயில் : சிட்டி வங்கியின் பிளாட்டினம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் ரூ.150க்கு பெட்ரோல் நிரப்பும் போது 4 டர்போ புள்ளிகல் வழங்கப்படுகிறது. மளிகை பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ரூ.150 செலவழித்தால் 2 டர்போ புள்ளிகளையும் வழங்குகிறது. 1 டர்போ பாயின்ட் என்பது 1 ரூபாய்க்கு சம்மான இலவச எரிபொருள் ஆகும். இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.1,000.
SBI கார்டு | BPCL : SBI கிரெடிட் கார்டுக்கான ஆக்டிவேசன் கட்டணத்தை செலுத்தினால், 6,000 போனஸ் ரிவார்டு பாயிண்டுகளையும், BPCL எரிபொருள், லூப்ரிகண்டுகள் மற்றும் பாரத் கேஸ் செலவினங்களுக்கு செலவழிக்கும் ஒவ்வொரு ரூ. 100க்கும் 25 ரிவார்டு பாயிண்ட்களும் கிடைக்கும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் மளிகைக் கடைகளில் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ. 100க்கும் 10 ரிவார்டு பாயிண்ட்கள் வழங்கப்படுகின்றன. இதனை BPCL பங்குகளில் 4000 ரூபாய் வரை எரிபொருள் நிரப்பும் போது ஒரு சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.1,499ஆகும்.
ஆக்சிஸ் வங்கி | ஆக்சிஸ் விஸ்டாரா : சிக்னேச்சர் இலவச பிரீமியம், எகானமி டிக்கெட் வவுச்சர், வாடிக்கையாளர்களுக்கு கிளப் விஸ்டாரா சில்வர் உறுப்பினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் உள்நாட்டு தங்கும் வசதி வழங்குகிறது. கிரெடிட் கார்டில் செலவழித்த ரூ.200க்கு வாடிக்கையாளர்கள் 4 சிவில் புள்ளிகள் புள்ளிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு 2.5 கோடி வரை விமான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும்.