முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

சமீபத்தில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, சில தனியார், அரசு மற்றும் சிறு நிதி வங்கிகள் முதலீட்டு காலக்கட்டங்களில் நிலையான வைப்புகளுக்கான ( FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.

 • 19

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  இளம் வயதில் நாம் உழைத்து சம்பாதிக்கும் வரை யாருடைய தயவும், உதவியும் தேவையிருக்காது. ஆனால் வயதான காலத்தில் தான் உதவி கிடைப்பதற்குக்கூட பணம் முக்கியமாக இருக்க வேண்டும் என்ற சூழல்  நிலவுகிறது. எனவே தான் 60 வயதினைக் கடந்தால் போதும், தம்மிடம் உள்ள சிறு தொகையைக்கூட எதில் டெபாசிட் செய்து வைக்கலாம். எதில் வட்டி விகிதம் என தேட ஆரம்பிக்கின்றனர் சீனியர் சிட்டின்கள். இவர்களுக்காகவே பல வங்கிகளும் எப்.டி, ஆர்டி க்கான வட்டி விகிதங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  சமீபத்தில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, சில தனியார், அரசு மற்றும் சிறு நிதி வங்கிகள் முதலீட்டு காலக்கட்டங்களில் நிலையான வைப்புகளுக்கான ( FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. இருந்தப்போதும் சில சிறு நிதி வங்கிகள் ( Small finance bank-SFB) பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை நிலையான வைப்புத்தொகைக் கணக்கிற்கு வட்டியை வழங்குகின்றனர். இதோ எந்தெந்த வங்கிகள்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..

  MORE
  GALLERIES

 • 39

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  FD க்கு அதிக வட்டியை வழங்கும் சிறு நிதி வங்கிகள் : யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity small finance bank) : இங்கு 1001 நாட்கள் நீங்கள் எப்டியில் பணம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், பொதுமக்களுக்கு 9 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 9.50 சதவீத வட்டியும் வழங்குகிறது. இந்த நடைமுறையின் படி புதிய விகித கட்டணங்கள் கடந்த பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ( Jana small finance bank) : இந்த வங்கியில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மேலான எஃப் டிகளில் நீங்கள் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், பொதுமக்களுக்கு 8.10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.80 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த நடைமுறை கடந்த பிப்ரவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 59

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank) : 999 நாட்களுக்கான எஃப்டிகளில், சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது மக்களுக்கு 8.51 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.76 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 69

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank) : இந்த சிறு நிதி வங்கியின் மூலம் நீங்கள் 560 நாட்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், பொதுமக்களுக்கு 8.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த புதிய வட்டி விகித கட்டணங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் அமலில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 79

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  உத்கரஸ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank) : 700 நாட்களுக்கான FDகளில், Utkarsh Small Finance வங்கியானது பொது மக்களுக்கு 8.00 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவிகிதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த வட்டி விகித கட்டணங்கள் கடந்த நவம்பர் 21, 2022 முதல் அமலில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  நார்த் ஈஸ்ட் சிறு நிதி (North east small finace bank) : 111 நாட்களுக்கான எஃப்டிகளில், நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பொது மக்களுக்கு 8.00 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.75 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  முதியோர்களுக்கு அதிக வட்டி.. சூப்பர் சேமிப்பு திட்டத்தை வைத்துள்ள சிறு நிதி வங்கிகளின் லிஸ்ட்.!

  இவ்வாறு பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டியை வழங்கும் சிறு நிதி வங்கிகளில் உங்களுக்கு எது பெஸ்ட்டாக தோன்றுகிறதோ அதில் டெபாசிட் செய்து எதிர்காலத்தில் எவ்வித நிதி பிரச்சனையும் இன்றி வாழ முயற்சி செய்யுங்கள்.

  MORE
  GALLERIES