முகப்பு » புகைப்பட செய்தி » இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

பழைய மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டிற்கு இடையே ஒன்றை தேர்வு செய்வது கட்டாயம் ஆகும். புதிய வரி முறையானது FY 2023-24 முதல் டிஃபால்ட்டாக்கப்பட உள்ளதால், இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து சொல்லாவிடில் புதிய வரி முறைப்படி உங்கள் சம்பளத்தில் இருந்து TDS பிடிக்கப்படும்.

  • 16

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபர் என்றால், FY 2023-24க்கு நீங்கள் எந்த வரி முறையை பின்பற்ற விரும்புகிறீர்கள் என்பது குறித்த மின்னஞ்சலை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு மின்னஞ்சலையும் பெறவில்லை என்றால் கூடிய விரைவில் பெறுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    வரி செலுத்தும் நபர்கள் இனி தாங்கள் என்ன மாதிரியான வரி முறையை பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதை தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி அவர்களது சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும். இந்த செயல்முறை ஏப்ரல் 2023-ற்குள் நிறைவுபெறும்.உங்களுக்கான வரி முறையை விரைந்து சென்று உங்கள் எம்ப்ளாயர்களிடம் ஏன் தெரிவிக்க வேண்டும் என்பதற்கான ஐந்து கரணங்களை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    பழைய மற்றும் புதிய வரி முறை ஆகிய இரண்டிற்கு இடையே ஒன்றை தேர்வு செய்வது கட்டாயம் ஆகும். புதிய வரி முறையானது FY 2023-24 முதல் டிஃபால்ட்டாக்கப்பட உள்ளதால், இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து சொல்லாவிடில் புதிய வரி முறைப்படி உங்கள் சம்பளத்தில் இருந்து TDS பிடிக்கப்படும். இந்த சூழ்நிலையில், FY 2023-24 கணக்கீட்டின்போது பழைய வரி முறை கருத்தில் கொள்ளப்படாது. அதாவது நீங்கள் வழக்கத்தை விட குறைவான சம்பளத்தை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    ஒருவர் தனது இன்கம்டாக்ஸ் ரிட்டர்னை தாக்கல் செய்யும் போது தனக்கான தேர்வு கூறலாம் என்றாலும், ஏப்ரல் மாதத்திற்குள் தனக்கான வரி முறையை வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு தெரிவிக்காமல் போகும் பட்சத்தில் ஒரு சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக, நீங்கள் வருடத்தின் தொடக்கத்தில் பழைய வரி முறையை தேர்வு செய்திருந்தீர்கள் என்றால், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது HRA அல்லது LTA போன்றவற்றை உங்களால் கிளைம் செய்ய இயலாது. ஏனெனில்,/இந்த தேர்வில் எம்ப்ளாயர் இது போன்ற பிடித்தல்களை உங்கள் சம்பள அமைப்பில் சேர்த்திருக்க மாட்டார்.வருமான வரித்துறையானது எல்லா நிறுவனங்களும் தங்களது ஊழியர்களிடம் வரி முறை குறித்த தேர்வை பெற்றிடுமாறு தகவல் அனுப்பி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    ஒரு ஊழியர் அவரது தேர்வை செய்யத் தவறும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்காக அவருக்கு புதிய வரி முறை அமல்படுத்தப்பட்டு, 192 பிரிவின் கீழ் TDS பிடிக்கப்படும்.வருமான வரித்துறையின்படி, ஒரு குறிப்பிட்ட ஃபினான்ஷியல் வருடத்தில் ஒரு முறை மட்டுமே ஒரு ஊழியரால் தனக்கான வரி முறையை தேர்வு செய்ய இயலும். ஒரு முறை தேர்வு செய்த பிறகு அதனை மாற்ற முடியாது. ரூ.7.5 லட்சத்திற்குள் சம்பளம் வாங்கும் நபர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இயல்பாகவே புதிய வரி முறை ஆக்டிவேட் ஆகிவிடும். கூடுதலாக, 7 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் புதிய வரி முறைப்படி எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை. எனினும், அதிக சம்பளம் வாங்கும் நபர்கள் தாங்கள் என்ன வரி முறையை பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 66

    இப்பவே இத பண்ணலன்னா நஷ்டம் உங்களுக்கு தான்..! வருமான வரித்துறை எச்சரிக்கை

    ஒவ்வொரு வருடமும் தங்களுக்கு விருப்பமான வரி முறையை தேர்வு செய்யும் உரிமை ஒருவருக்கு உண்டு. ஆனால் இந்த ஆண்டிற்கு இப்போதே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் FY 2023-24 ஆம் ஆண்டிற்கு உங்கள் சம்பளத்தில் இருந்து அதிக பணம் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

    MORE
    GALLERIES