பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதில் முதன்மையான ஒன்று சுகன்யா சம்ரிதி யோஜனா என்கின்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம். அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்குக் கணக்கு தொடங்க முடியும்.
உங்களால் நேரடியாகத் தபால் நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், ஆன்லைன் வாயிலாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும். தொடர்ந்து நீங்கள் மாதந்தோறும் பணத்தைச் செலுத்தி வரவும். ஒருவேளை பணத்தைச் சரியாகக் கட்டத் தவறும் பட்சத்தில் டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தினால் தான் கணக்கைப் புதுப்பிக்க முடியும்.