இணையதளத்தை பயன்படுத்தி மின் கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை பராமரிப்பதற்கான ஒரு பிரத்தியேக நிறுவனம் தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் என்று கூறப்படும் TANGEDCO. ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்த முதலில் TANGEDCO-வின் பிரத்தியேக இணையதளமான என்ற இந்த முகவரிக்கு செல்ல வேண்டும்.
TANGEDCO இணையதளத்தின் ஹோம் பேஜின் மேல்பக்கம் கொடுத்துள்ள தேர்வுகளில் ஆன்லைன் சர்வீசஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆன்லைன் சர்வீசஸ்-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து தேர்வுகளில் ஆன்லைன் பில் பேமென்ட் என்பதனை தேர்ந்தெடுக்கவும். ஆன்லைன் பேமென்ட் என்பதை கிளிக் செய்தவுடன் வேறு ஒரு திரை தோன்றும். நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்து உங்களிடம் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அவற்றை பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம்.
ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் ஆன்லைன் பேமெண்ட் செய்வதற்காக புதிதாக ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்தத் திட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ரிஜிஸ்டர் செய்யாமலேயே குவிக் பே (Quick Pay) என்ற தேர்வினை பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம். திரையின் வலது பக்கம் குவிக் பே என்ற நீல நிற பட்டன் ஒன்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் வேறொரு திரை தோன்றும். அதில் உங்கள் மின் கட்டணத்திற்கான வாடிக்கையாளர் எண்ணை செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் மின்சார கட்டணத்த செலுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கியூ ஆர் கோட், யுபிஐ, நெட் பேங்கிங் போன்ற அனைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் முறைகளை பயன்படுத்தலாம். தமிழ்நாட்டின் பிரத்தியேக மின் சேவைக்கான TANGEDCO-இணையதளம் மட்டுமல்லாமல் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற மற்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமும் மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.