முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

PAN and Aadhaar : வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • 16

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், வருமான வரி சட்டம் 1961-ன் கீழ் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டுகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பயன்படுத்த முடியாததாகிவிடும். பான் அட்டையில் உள்ள 10 இலக்க எண்கள் இனி செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2023க்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கத் தவறினால் தனிநபர்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவோ அல்லது பான் தொடர்பான சேவைகளை அணுகவோ தடை செய்யப்படுவார்கள். ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டதும் செயல்படுத்தமுடியாது. அதுமட்டுமல்லாமல் அதிக வரி பிடித்தம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  அபராதத் தொகை : ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தற்போது விரும்பவர்கள் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். 2022, ஜூன் 30வரை இந்த கட்டணம் ரூ.500 ஆக இருந்தது, இந்நிலையில் கடந்த ஜூலை 1, 2022 அன்று அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ் மூலம் ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எப்படி? : உங்கள் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ் ஆப்ஷனுக்கு சென்று UIDPAN என டைப் செய்ய வேண்டும். UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். குறுஞ்செய்தி அனுப்பிய பின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  ஆன்-லைனில் ஆதார்-பான் இணைப்பது எப்படி? : வருமானவரித்துறையின் eportal.incometax.gov.in or incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.அந்த வலைதளத்தில் உங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது ஆதார் எண் யுசர் ஐடியாகும்(user ID), பாஸ்வேர்டு உங்களுடைய பிறந்த நாளாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  இப்போது திரையில் வரும் லிங்கை கிளிக் செய்தால், ஹோம்பேஜ்ஜுக்கு செல்லும். அதில் ஆதாருடன் பான் இணைப்பது என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து, ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.கேப்சா குறியீடுகளை டைப்செய்து உறுதி செய்ய வேண்டும். ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட செய்தி உங்களுக்கு கிடைக்கும்

  MORE
  GALLERIES

 • 66

  வரி அதிகமாகும்.. சேவைகள் முடங்கும்.. . பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு நெருங்கும் நாட்கள்!

  குறிப்பு : உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் எண்கள் பொருந்தவில்லை என்றால், உங்கள் பான் பதிவுகளுடன் பொருந்துமாறு உங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட இணையதளங்களான eportal.incometax.gov.in or incometaxindiaefiling.gov.in வேலை செய்யவில்லை என்றால் utiitsl.com, egov-nsdl.co.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்

  MORE
  GALLERIES