ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்ற வங்கிகள் பலகட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிப்பதால், ஹேக்கர்களும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங்கான பான் கார்டு - ஆதார் இணைப்பை கையில் எடுத்துள்ள ஹேக்கர்கள் இதன் மூலம் மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்
ஹேக்கர்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு sms மூலம் ஹேக் லிங்க் ஒன்றை அனுப்புகின்றனர். அதில், உங்கள் பான் கார்டை இணைக்காவிட்டால் விரைவில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற தகவலைச் சொல்லி ஒரு லிங்க் ஒன்றையும் அனுப்புகின்றனர். வங்கியில் இருந்து அனுப்பப்படும் எஸ் எம் எஸ் போலவே அந்த மெசேஜ் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அந்த மோசடி லிங்கை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் அதுமாதிரியான smsகளை தவிர்த்து, லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்யாமல் இருங்கள்.