வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், சொந்த வீடு கட்ட வேண்டும் என்று கோஷமிடும் ஏராளமானோர் வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர். இன்னும் பலர் சொந்த ஊரை விட்டு வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ பணிபுரிந்து வருவோம். அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்கு எளிதாக வாடகைக்கு வீடு எடுத்திருப்போம். வாடகை வீட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.
ஆம், உண்மைதான்…. நில உரிமையாளர்களிடமிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க கண்டிப்பாக சில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், நில உரிமையாளர்களிடமிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த விதிகளை நீங்கள் அறிந்திருந்தால், எந்த உரிமையாளரும் உங்களை ஏமாற்ற முடியாது. அப்படி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷஜஹயங்கள் என்ன என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
அத்தியாவசிய சேவைகள் : வழக்கமான நீர் வழங்கல், மின்சாரம், பார்க்கிங், சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் உங்கள் அடிப்படை உரிமைகள். இந்த அடிப்படை வசதிகளை நீங்கள் பெறுவதை உறுதி செய்வது உரிமையாளரின் பொறுப்பு. அடிப்படைத் தேவை உரிமையாளரால் தடுக்கப்பட்டால், உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு விசாரணையைத் தொடங்கலாம். மேலும், அதிகாரம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு வாங்க முடியும்.
வீட்டை திடீர் என காலி செய்ய கூறுவது : முன் அறிவிப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்தை வழங்காமல் நில உரிமையாளர் உங்களை வளாகத்தை காலி செய்யும்படி கேட்க முடியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அறிவிப்பு காலம் 15 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை இருக்கும். குத்தகைதாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை காலி செய்யத் தவறினால், உரிமையாளருக்கு இழப்பீடாக மாதாந்திர வாடகையை இரட்டிப்பாக்க உரிமை உண்டு.
அடிக்கடி உரிமையாளர் வர முடியாது : வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, பிளாட் வாடகைதாரருக்கு சொந்தமானது. உங்கள் அனுமதியின்றி வீட்டு உரிமையாளர் குடியிருப்பில் நுழைய முடியாது. வீட்டு உரிமையாளர் அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு பழுதுபார்ப்பு தொடர்பானதாக இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் அனுமதியுடன் வீட்டிற்குள் நுழைய முடியும்.
திடீரென வாடகை அதிகரிப்பு : ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு எதிராக வீட்டு உரிமையாளர் வாடகையை திடீர் என அதிகரிக்க முடியாது. ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர் வாடகையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் வாசித்தால் 5 சதவீதம் வாடகை உயரும் என்பதை போல.
பழுதுபார்க்கும் பணி உரிமையாளர் செய்ய வேண்டும் : வீட்டுச் செலவை ஏற்க வேண்டியது வீட்டு உரிமையாளரின் பொறுப்பு. இருப்பினும், சிறிய சேதம் ஏற்பட்டால், அதை சரிசெய்வது குத்தகைதாரரின் பொறுப்பு. குத்தகைதாரர் ஏற்படுத்திய சேதங்களுக்கு பணம் செலுத்த மறுத்தால், நில உரிமையாளர் பாதுகாப்பு வைப்புத்தொகையிலிருந்து தொகையை கழிக்கலாம்.