முகப்பு » புகைப்பட செய்தி » அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான எஸ்சிஎஸ்எஸ் திட்டமானது பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது.

  • 16

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    இந்தியாவைச் சேர்ந்த 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஒரு சேமிப்பு திட்டமே மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) ஆகும். இந்த திட்டமானது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது வேறு எந்த சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்கக்கூடியது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான எஸ்சிஎஸ்எஸ் திட்டமானது பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வுக்கு பிறகு ஒரு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஒரு சிறப்பான திட்டமாக இத்திட்டம் செயல்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை (எஸ்சிஎஸ்எஸ்) திறப்பது எப்படி? : எஸ்சிஎஸ்எஸ் கணக்கினைத் தொடங்க மூத்த குடிமக்கள் எதேனும் வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகலாம். கணக்கைத் திறக்க குறைந்தபட்சமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். அதே சமயம், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம்.இந்த கணக்கில் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதுவும் அது 1000 அல்லது 1000 ரூபாயின் பெருக்கல் தொகையாக, அதிகபட்ச தொகையாக 30 லட்சம் வரை இருக்கலாம். கணக்கில் இருந்து பணத்தை அடிக்கடி எடுக்க முடியாது.

    MORE
    GALLERIES

  • 36

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை யாரால் தொடங்க முடியும்? : 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஒரு நபரால் கணக்கைத் தொடங்க முடியும் அல்லது 55 வயதிற்கு மேல் ஆனால் 60 வயதிற்குள்ளாக இருக்கும் சூப்பர்ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றுக்கொண்ட நபர்களும் இந்த திட்டத்தை துவங்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    பாதுகாப்பு சார்ந்த பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் (குடிமைப் பாதுகாப்பு சார்ந்த ஊழியர்கள் தவிர்த்து) ஐம்பது வயதை எட்டியதும் ஒரு கணக்கைத் துவங்கலாம். அதே சமயம் இவர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும்.தனியாகவோ அல்லது துணையுடனோ ஒரு நபர் இந்த கணக்கை துவங்கலாம். எனினும், கணக்கில் உள்ள பணத்தின் மொத்த அணுகலையும் முதல் அக்கவுண்ட் ஹோல்டரே பெறுவார்.

    MORE
    GALLERIES

  • 56

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் : பணத்தை டெபாசிட் செய்த நாளில் இருந்து வட்டியானது மார்ச் 31/30 ஜூன்/30 செப்டம்பர்/31 டிசம்பர் வரைஏப்ரல்/ஜூலை/அக்டோபர்/ஜனவரி 1வது வேலை நாளில் செலுத்தப்படும். இது கணக்கைத் திறந்த பின் முதன்முதலாக வட்டி செலுத்தப்படும் நாளாகும். அதன் பிறகு வட்டியானது ஏப்ரல்/ஜூலை/அக்டோபர்/ஜனவரி முதல் வேலை நாளில் செலுத்தப்படும். ஜூன் 30, 2023 அன்று முடிவடையும் காலாண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    அதிக வட்டி.. ரூ.1000 முதல் 30 லட்சம் வரை.. முதியோருக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்.!

    கணக்கைத் திறந்த நாளில் இருந்து 5 வருடங்கள் நிறைவு செய்தவுடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். டெபாசிட்டர் நினைத்தால் இந்த கணக்கை மேலும் 3 வருடங்களுக்கு நீட்டித்து கொள்ளலாம்.ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்படுவதன் மூலமாக கணக்கை முன்கூட்டியே நிறைவு செய்யலாம். எஸ்சிஎஸ்எஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் மொத்த பணத்திற்கும் வருமான வரி விதியின் 80-சி பிரிவின் கீழ் பிடித்தல்களுக்கு உட்பட்டது.

    MORE
    GALLERIES