எஸ்பிஐ விரைவுக் கடனின் கீழ் ரூ. 20 லட்சம் வரை பெறலாம். இந்தக் கடன் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டும். மத்திய, மாநில, பொதுத்துறை, கார்ப்பரேட் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த வகையான கடன்களைப் பெறலாம். வயது 21 முதல் 58க்குள் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது வேலையில் இருக்க வேண்டும்.