நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளது. அதைக் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம். கண்டிப்பாக இந்த தகவலை ஒவ்வொரு எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் சேவையில் பெரும் கவனம் செலுத்தும் எஸ்பிஐ சமீப காலமாக பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வகை கணக்குகளின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எஸ்.பி.ஐயில் முதலில் இந்த கணக்குகளுக்கு ஒரு மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. பின்பு இந்தக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.