ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற மத்திய வங்கி சுமார் 46 கோடி வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது. தற்போது அதனின் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்கில் இருந்து ரூ.206.5 பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. தங்களின் அனுமதியின்றி பணம் பிடிக்கப்பட்டதால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.