இன்றைக்கு கிராமம் முதல் நகரம் வரை மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள ஒர் வார்த்தை "சிபில் ஸ்கோர்". ஆம் எந்த வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற விரும்பினாலும் நம்முடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் மட்டுமே எவ்வித அச்சமும் இல்லாமல் நமக்கு வழங்குவார்கள். முதலில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? என்பது குறித்தும் என்னென்ன கட்டுக்கதைகள் எல்லாம் மக்கள் முன் வைக்கப்படுகிறது என்பது குறித்து இங்கே விcre
கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் என்பதைக் குறிக்கிறது சிபில் ஸ்கோர். ரிசர்வ் வங்கியினால் அங்கீகிக்கப்பட்ட நிறுவனமான இது தனி நபர்களுக்கும் வணிகத்திற்கும் கூட கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களை வழங்குகிறது.எனவே நாம் எங்கு கடன் வாங்கியிருந்தாலும் சரியான நேரத்தில் கடன்களைத் திருப்பி செலுத்த வேண்டும். இல்லாவிடில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். குறிப்பாக சிபில் ஸ்கோரானது 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது. இதில் 600க்கு கீழ் இருந்தால் மிகவும் குறைவான ஸ்கோர், 750-900 என்றால் நல்ல ஸ்கோர் என தெரிவிக்கப்படுகிறது. எனவே உங்களது கிரெடிட் ஸ்கோரை எப்போதும் பிரச்சனையில்லாமல் பார்த்துக் கொண்டாலே எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.
சிபில் ஸ்கோர் குறித்த கட்டுக்கதைகள் (myths of cibil score) : பொதுவாக மக்களிடம் சிபில் ஸ்கோர் குறைந்த அச்சம் அதிகளவில் உள்ளது. சேமிப்புக்கணக்கின் செக் அதாவது காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் ஒரு நபரின் சேமிப்புக்கும் அல்லது முதலீட்டிற்கும் எந்த தொடர்பு இல்லை. இதனால் உங்களில் சிபில் கோர்ஸ் பாதிக்கப்படாது. அதே சமயம் இஎம்ஐ அல்லது உங்களின் கடனின் தவணையைக் கட்ட தவறிவிட்டால் உங்களின் சிபில் ஸ்கோர் குறைக்கப்படலாம்.
சிபில் ஸ்கோரை அடிக்கடி சரிபார்த்தல் பாதிப்பு ஏற்படும் என்ற கட்டுக்கதைகள் அதிகளவில் மக்களிடம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது தவறான தகவல். நீங்கள் எதில் கடனை வாங்குவதற்கு முயற்சி செய்தாலும் சிபில் ஸ்கோரைப் பார்க்க வேண்டியிருக்கும். தேவையில்லாமல் சரிபார்த்தால் பாதிப்பு ஏற்படுமோ? என்ற கவலை வேண்டாம். சிபில் அறிக்கையை எத்தனை முறை நீங்கள் சரிபார்த்தாலும் எவ்வித பாதிப்பும் இல்லை. இது நல்ல நடைமுறைதான்.
இதே போல் சிபில் ஸ்கோர் என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உதவ மட்டும் தான் என்ற கட்டுக்கதைகளை மக்கள் நம்புகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு. சிபில் என்பது கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியாகும். இது கடன் வழங்குபவர்களின் நம்பகத்தன்மை மதிப்பிடுவதில் கடன் வழங்குபவர்களுக்கு உதவுவது மட்டுமில்லாமல், அவர்களின் செலவினங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புகிறது என்பது தான் உண்மை.
சிபில் அறிக்கையில் நேரடியாக திருத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் உள்ளது. ஆனால் இது முற்றிலும் பொய்யானத் தகவல் மற்றும் கட்டுக்கதைகளில் ஒன்று தான். நீங்கள் சிபில் அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்ய விரும்பினால், சிபில்-ஐ நேரடியாக அணுகுவதற்குப் பதிலாக அந்தந்த வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்வது நல்லது. கடனளிப்பவரின் சிபில் அறிக்கையில் நேரடியாக மாற்றங்கள் அல்லது திருத்தங்களைச் செய்யும் அதிகாரம் இல்லை. சிபில் அறிக்கையில் உள்ள திருத்தங்கள் அந்தந்த வங்கிகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பது தான் உண்மை.