முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆசை என்றால் அது நிச்சயம் சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்பது தான்.

  • 112

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஆசை என்றால் அது நிச்சயம் சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்பது தான்.. என்ன தான் வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், குடிசையோ அல்லது மாளிகையோ ஏதாவது ஒன்று தமக்குரிய சொந்த வீடாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதுப்போன்றவர்களுக்காகவே பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார் வங்கிகள் வரை கடன்களை வாரி வழங்குகின்றனர். இப்படி நீங்கள் புதிய வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தால், முதலில் இதை தெரிந்துக்கொள்வோம்..

    MORE
    GALLERIES

  • 212

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…. சிபில் ஸ்கோர் - வங்கிகள் முதல் பிற கடன் வழங்கும் எந்தவொரு நிதி நிறுவனங்களாக இருந்தாலும் கடன் கொடுப்பதற்கு முன்னதாக உங்களின் சிபில் ஸ்கோரை சரிபார்ப்பார்கள். எனவே நீங்கள் வேறு எங்கும் கடன் வாங்கியிருந்தாலும் உங்களது கடனை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் கிரிடீட் அல்லது சிபில் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படும். எனவே எப்போதும் அதை கவனித்துக்கொள்ளவும்.

    MORE
    GALLERIES

  • 312

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    தகுதி - கடன் வழங்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் நீங்கள் என்ன பணிபுரிகிறீர்கள் ? :  எவ்வளவு வருமானம்? இதன் மூலம் எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் வருமானம் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டுக் கடன் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 412

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    வீட்டுக் கடன் வட்டி விகிதம் : நீங்கள் வீட்டுக்கடன் வாங்குவது முன்னதாக நீங்கள் கடன் வாங்கவிருக்கும் வங்கிகளுடன் பிற வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 512

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    வட்டி வகை : வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னதாக நீங்கள் எந்த வட்டி வகையில் கடன் பெற போகிறீர்கள்? என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். அதாவது நிலையான, ஃப்ளோட்டிங் அல்லது கலப்பு வீத வீட்டுக் கடனா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் போது மாதந்தோறும் நீங்கள் கட்டக்கூடிய இஎம்ஐ தொகை எவ்வளவு வரும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ள முடியும்.அதாவது நிலையான விகிதக் கடனில், வீட்டுக் கடன் வாங்கும் போது வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. மறுபுறம், ஃப்ளோட்டிங் வீதம் அல்லது அனுசரிப்பு வீதம் வீட்டுக் கடன்கள் கடனளிப்பவரின் பெஞ்ச்மார்க் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கலப்பு வட்டி விகிதம் என்பது ஒரு நிலையான விகிதத்திற்கு ஒரு கால அளவு முடிவு செய்யப்பட்டு பின்னர் ஃப்ளோட்டிங் விகிதம் பயன்படுத்தப்படும்.

    MORE
    GALLERIES

  • 612

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    வீட்டுக் கடன்களின் வகைகள் : வங்கிகள் பல கடன் திட்டங்களை வழங்குவதால், நீங்கள் பெறக்கூடிய பல்வேறு வகையான வீட்டுக் கடன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 712

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    செயலாக்கக் கட்டணம் : நீங்கள் வாங்கும் வீட்டுக்கடனுக்கு ஏதேனும் செயலாக்கக் கட்டணம் உள்ளதா? எனச் சரிபார்க்கவும். வங்கிகள் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை செயலாக்கக் கட்டணமாக அல்லது குறைந்தபட்சத் தொகையை கட்டணமாக நிர்ணயிக்க கூடும். ஆவணங்கள் மற்றும் சட்டக் கட்டணம் உட்பட கடன் தொடர்பான பிற கட்டணங்கள் இருக்கலாம். எனவே நீங்கள் கடன் வாங்கவிருக்கும் நபர்களுடன் இந்த விவரங்களை முழுமையாகச் சரிபார்ப்பது நல்லது.

    MORE
    GALLERIES

  • 812

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    காப்பீடு  :  கடனுக்கான லோன் கவர் டேர்ம் அஷ்யூரன்ஸ் திட்டம் தேவையா? என்பதைச் சரிபார்க்கவும். கடன் தொகை - உங்கள் தேவைக்கேற்ப கடன் தொகை கிடைக்கிறதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்கவும். பெரும்பாலான கடன் வழங்குபவர்கள் சொத்து செலவில் 75 முதல் 90% வரை வீட்டுக் கடனை வழங்குகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 912

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    கடன் காலம் : கடனின் காலம் எவ்வளவு மற்றும் நீங்கள் EMI-க்களை எப்போது செலுத்துவீர்கள் என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 15 வருடங்களுக்கு மேல் நீங்கள் கடன் திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 1012

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    முன்கூட்டியே அடைக்க முடியுமா ? :- நம்முடைய அவசரத் தேவைக்காக நாம் வீட்டுக்கடன் வாங்கி விடுவோம். சில நேரங்களில் நம்மிடம் மொத்தமாக பணம் இருந்தால் கடனை அடைத்துவிட முடியுமா? என்பதை கேட்டறிந்துக்கொள்ளுங்கள். சில வங்கிகள் இதற்கு அனுமதி வழங்காது. எனவே தெரிந்துக்கொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 1112

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    வரிச் சலுகைகள் :  வீட்டுக் கடன்கள் வரிச் சலுகைகளுடன் வருகின்றன, மேலும் வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கு நீங்கள் வரி விலக்குகளைப் பெறலாம். கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் வரிச் சலுகைகள் பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

    MORE
    GALLERIES

  • 1212

    வீடு கட்ட லோன் வாங்க போறீங்களா? வங்கி கடன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க!

    சட்ட ஆவணங்கள் :  KYC மற்றும் கடனைச் செயலாக்குவதற்கான நோக்கத்திற்காக கடன் வழங்குநரால் என்ன வகையான ஆவணங்கள் கேட்கப்படுகின்றன என்பதைச் சரிபார்க்கவும். இது வருமானம், வேலைவாய்ப்பு சான்று மற்றும் அசல் சொத்து ஆவணங்களை உள்ளடக்கியிருக்கலாம், அவை கடன் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    MORE
    GALLERIES