முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » 15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

இரண்டு வருடங்களுக்கு சர்வோட்டம் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 8.14 சதவீதம் வட்டியும், ஒரு வருடத்திற்கான வைப்பிற்கு 7.6% அளவிலான வட்டியும் சீனியர் சிட்டிசன்களுக்கு அளிக்கப்படுகிறது.

 • 17

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  15 லட்சத்திற்கு மேல் நிரந்தர வாய்ப்புத் தொகையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பிபிஎஃப், என்எஸ்சி, மற்றும் அஞ்சலக வைப்பு திட்டங்களை விட அதிக அளவு வட்டி வழங்கும் சர்வோட்டம் நிரந்தர வைப்பு திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திருத்தி அமைத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சர்வோட்டம் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் மூலம் சீனியர் சிட்டிசன்களுக்கு இரண்டு வருடங்களுக்கு 7.9 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. சீனியர் சிட்டிசன் அல்லாத பொது மக்களுக்கு சர்வோட்டம் நிரந்தர வைப்பு திட்டத்தின் கீழ் 7.4 சதவீதம் அளவிலான வட்டி அளிக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  இதுவே ஒரு வருடத்திற்கான சர்வோட்டம் நிரந்தர வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.6 சதவீத வட்டியும், சீனியர் சிட்டிசன்கள் அல்லாத பொது மக்களுக்கு 7.1% அளவு வட்டியும் வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள அறிவிப்பின்படி சர்வோட்டம் திட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள புதிய மாறுதல்கள் 17 பிப்ரவரி 2023 முதல் அமல்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  அதன்படி இரண்டு வருடங்களுக்கு சர்வோட்டம் நிரந்தர வைப்பு நிதி திட்டத்தின் கீழ் 15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 8.14 சதவீதம் வட்டியும், ஒரு வருடத்திற்கான வைப்பிற்கு 7.6% அளவிலான வட்டியும் சீனியர் சிட்டிசன்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவே 2 கோடியில் இருந்து 5 கோடி வரை நிரந்தர வைப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு, ஒரு வருடத்திற்கும் 7.55 சதவீதம் வட்டியும், இரண்டு வருடத்திற்கு 7.4சதவீதம் வட்டியும் சீனியர் சிட்டிசன்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த எஸ்பிஐ சர்வோட்டம் நிரந்தர கால வைப்பு நிதி திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதமானது, வேறு பல சிறு சேமிப்பு திட்டங்களின் மூலமும் அஞ்சலக வைப்பு திட்டங்களின் மூலமும் சீனியர் சிட்டிசனுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாகும்.

  MORE
  GALLERIES

 • 47

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  பிபிஎஃப் வட்டி விகிதம் : பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) கீழ் முதலீடு செய்பவர்களுக்கு 7.1% அளவு வட்டி கிடைக்கிறது. ஆனால் இதில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் வரை தான் இதில் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்பிஐ சர்வோட்டம் வைப்பு திட்டத்தை விட வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும் வரி சலுகைகளை பொருத்தவரையில் பிபிஎஃப் ஆனது மற்ற நிரந்தர வைப்பு திட்டங்களை காட்டிலும் சிறந்ததாக விளங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  அஞ்சலக வட்டி விகிதம் : அஞ்சலகத்தில் ஐந்து வருடங்கள் வரையில் கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 7 சதவீதம் அளவு வட்டியானது கிடைக்கும். ஒரு வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 6.6 சதவீதமும், இரண்டு வருடம் முதலீடு செய்வதற்கு 6.8% வட்டி கிடைக்கிறது. அஞ்சல் அலுவலகத்தின் மாத வருமான கணக்கின் படி 7.1% அளவு வட்டி விகிதம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  என்எஸ்சி வட்டி விகிதம் : தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வருடத்திற்கு 7 சதவீதம் அளவு வட்டி கிடைக்கிறது. நீங்கள் 5 வருடங்கள் வரை இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பட்சத்தில் பிரிவு 80C ன் கீழ் உங்களுக்கு வரிச்சலுகைகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 77

  15 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம்..! எஸ்பிஐ வழங்கும் சர்வோட்டம் திட்டம்..

  கேவிபி வட்டி விகிதம் : கிசான் விகாஸ் பாத்ரா வைப்பு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 7.2% அளவு வட்டி கிடைக்கிறது. இதுவே 120 மாதங்களுக்கான திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களது வட்டி விகிதமானது இரண்டு மடங்கு அதிகரிக்க கூடும்.

  MORE
  GALLERIES